ட்விட்டர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ப்ளூ டிக் கட்டண சந்தா சேவை தொடங்கியது மெட்டா நிறுவனம்..!
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ப்ளூ டிக் கட்டண சந்தா சேவை..!
சமீப காலமாக ட்விட்டரில் மட்டுமே ப்ளூடிக் சேவை அறிமுகம் செய்த நிலையில் தற்பொழுது மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூடிக் கட்டண சந்தா சேவையை தொடங்கி வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ப்ளூடிக் பெற விரும்பும் பயனாளர்கள் அதற்கான சந்தா தொகையை செலுத்தி விட்டு ப்ளூடிக் சேவையை பெற்றுக் கொள்ளலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்பொழுது அமெரிக்காவில் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளது.
மெட்டா நிறுவனம் ஊடக நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்ற நபர்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் சேவை கொடுத்துள்ள நிலையில் தற்போது சந்தா செலுத்தும் அனைத்து பணியாளர்களுக்கும் இந்த சேவை கிடைக்கும் என்ற அறிவிப்பை மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.