கேமிராவை ஹேக் செய்யும் ஹேக்கர்கள்
உங்களுக்கு தெரியாமலே உங்கள் போன் மற்றும் லேப்டாப் மூலமாக உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் கேமிரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
This is an Alert
“கவனிங்க… உங்கள் கைபேசி கேமிரா உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்பதை எப்போதாவது சோதனை செய்து பார்த்து உள்ளீர்களா? சரி உங்கள் பரிவர்த்தனைகள் தொடக்கம் முதல் முடிவு வரை End To End பாதுகாக்கப்பட்டாலும் உங்களுடைய ரகசிய பரிமாற்றங்களை ஹேக்கர்கள் கண்காணிக்க காத்து கிடக்கின்றனர்”.
இணையதள குற்றவாளிகள்
இணைய குற்றவாளிகள் தங்கள் தேவைகளை குறுக்கு வழியில் பெற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர் அப்படி அவர்கள் உருவாக்கியது தான் கேமிரா ஊடுருவும் மால்வேர்.
யாரெல்லாம் பாதிக்கப்படுவிர்கள்?
இதுபோன்ற குற்றங்களை செய்யும் இணையதள குற்றவாளிகள் உண்மையில் உங்கள் கேமிராவை நேரடியாக தாக்கி அதை தங்கள் வசம் கொண்டு வர முடியாது ஆகவே அவர்கள் அந்த கேமிரா உள்ள சாதனங்களை தங்கள் வசம் இயக்கி அதனை செய்து முடிக்கின்றனர். எ.கா cctv கேமிராக்கள் குழந்தை கண்காணிப்பு கேமிரா baby monitors, அதிவேக இணைய பயன்பாட்டில் இணைக்கப்பட்டு இருக்கும் செல்போன் மற்றும் கணினிகள். இவைகள் தொடர்ந்து இணையத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் யாவருமே இவர்களால் பாதிக்கப்படலாம்.
இந்த மால்வேர் என்னதான் செய்யும்?
ஒருமுறை இந்த மால்வேர் உங்கள் கணினி அல்லது கைபேசியில் நுழைந்துவிட்டால் பிறகு உங்கள் வெப் கேம் அல்லது டூயல் கேமிரா , மைக் மற்றும் பிளாஸ் உட்பட அனைத்தும் அவர்கள் கைகளில். உங்கள் செயல்பாடுகளை பொருத்து கூட அதன் Function இருக்கும்.
நீங்கள் இருட்டில் இருந்தால் IR இயக்கவும் அதிக வெளிச்சம் இருந்தால் ஒளி அளவை குறைத்தும் தன்னிச்சையாக செயல்படும் உங்கள் கேலரியில் உள்ள உங்கள் விடியோக்களை திருடும் அல்லது உங்கள் கேமராவை உங்கள் அனுமதி இல்லாமல் இயக்க செய்து ஹேக்கருக்கு லைவ் செய்யும்.
ஒரே ஒரு கிளிக் முடிந்தது கதை….
சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் ஒரு இளைஞன் 100 பெண்களின் அந்தரங்க வீடியோவை google play store ல் இருந்து பதிவிறக்கம் செய்த ஒரு ஆப் கொண்டு ரெக்கார்ட் செய்தான் (நாம் அதை மறந்து இருப்போம்). ஆனால் சைபர்லைட்ஸ் அதை பற்றி பேசவில்லை அந்த பெண்கள் தங்கள் அறியாமையால் அதை தங்கள் கைபேசிகளில் வைத்தே அவனிடம் சிக்கியுள்ளனர் இது நீங்கள் கண்ணில் வெண்ணை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தாலும் நேக்காக ஆட்டையை போட்டு விடுவார்கள்.
ஒரு கதை சொல்லட்டா சார்.
இதெல்லாம் நமக்கு சில மாதம் அல்லது வருடங்களுக்கு பிறகே தெரியும் ஆனால் 2013 ஆம் வருடமே Jared James வயது 20 என்பவன் Skype ல் மால்வேர்களை வைத்து இளம் பெண்களின் ஆபாச படங்கள் திருடியுள்ளான். 17 வயது பெண்ணிடம் தன்னை நிர்வாணப்படுத்தி காட்ட வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளான் ஒரு பெண் அதை மறுக்க அவளது அந்தரங்க புகைப்படங்களை Instagram page ல் பதிவேற்றியுள்ளான்.
Source : Businessinsider
இதுமாதிரி ஏகப்பட்ட உண்மை சம்பவங்கள் இருக்கு.
இதை எப்படி கண்டுபிடிப்பது..
உலகின் பெரும்பாலான மக்கள் தாங்கள் கண்காணிக்கப்படுவதை உணராமலே உள்ளனர். இந்த மால்வேர்(பெயர் குறிப்பிட அனுமதி இல்லை ) ஆனது கணினி அல்லது கைபேசியின் ஆணிவேர் போன்றது மேலும் அது தனக்கு தானே பெயரையும் மாற்றிக்கொள்ளும். அதாவது உங்கள் பெயரிலேயே ஒரு படமாக வைத்துக்கொள்ளும் இதை கண்டுபிடிக்க சில வழிகள் உள்ளன அவைகள்.
கேமிரா LED அல்லது பிளாஷ் தன்னிச்சையாக ஆன் ஆகுவது.
நீங்கள் பயன்படுத்தா நேரத்திலும் அதிக டேட்டா செலவாகுவது
பயன்படுத்தா வேலையிலும் கைபேசிகள் அதிக அளவில் சூடாவது.
அதிக பயன்பாடு அல்லது இயக்கத்திற்கான எச்சரிக்கை பதிவை பெறுவது.
எப்படி தடுப்பது..?
இணையத்தில் நிறைய இலவச ANTIMALWARE மென்பொருட்கள் உள்ளன அவைகளை கொண்டு இதன் ஊடுருவளை தடுக்கலாம்.
தேவயில்லாத அல்லது தெரியாத மென்பொருட்கள் அப்ளிகேஷன் போன்றவற்றை நிறுவாமல் இருப்பது.
Browser ல் Cache and Plugins களை அடிக்கடி முறையாக கவனிப்பது அல்லது தேவையில்லாதவற்றை நீக்குவது.
கண்ணை முடிக்கொண்டு அனைத்திற்கும் YES YES YES என கொடுக்காமல் ஒரு முறை தெளிவாக படித்து பார்ப்பது போன்றவைகள்.
ஆனால் இவைகள் நீங்கள் கட்டாயப்படுத்தி இயக்கம் தேவையில்லாத கட்டளைகளை தடுக்க முடியாது. சைபர்லைட்ஸ் உங்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை வழங்குகிறது.
அப்படி கண்டுபிடிக்கும் பட்சத்தில் அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டு உடனடியாக செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் கொடுத்து பிரட்சனையை சொல்லி தீர்வு காணலாம்.