எச்சரிக்கையாக இருங்க… இந்த ஆப்ஸ் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கா அப்ப உடனே டெலிட் பண்ணுங்க…!
அலெர்ட் மக்களே அலெர்ட்..!
பரவலாகவே இப்பொழுது பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகின்றனர். ஆண்ட்ராய்டு போன்களை குறி வைத்து தாக்கும் மால்வேர் வைரஸ் என ஸ்மார்ட்போன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சில குறிப்பிட்ட ஆப்ஸ் நம் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்படும் பொழுது பல்வேறு விதமான ஆபத்துகள் வந்து சேருகிறது. குறிப்பிட்டு சில ஆப்ஸ் நம் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இருப்பதால் நாம் பயன்படுத்தும் வங்கி மற்றும் இதர தகவல்கள் திருடப்படுகிறது.
இது குறித்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர். வங்கி கணக்குகளை குறிவைத்து திருடப்படும் Black Rock மற்றும் ERMACஎன்ற வைரஸை உருவாக்கியவர்கள் தான் இப்பொழுது சில வைரஸ் ஆப்ஸ் உருவாக்கியுள்ளனர்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்பிட்ட ஆப்ஸ் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்.
Love sticker, Logo Design Maker, Animal Doodle, Funny Emoji Keyboard, Drawing paper paint