SMS ல் லிங்க் இருந்தால் திறக்க வேண்டாம்- இந்திய அரசு எச்சரிக்கை
கைபேசி உபயோகிப்பாளர்களை இணையதள குற்றவாளிகளிடம் இருந்து தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் இந்திய சைபர் பாதுகாப்பு துறையினர் தற்பொழுது. குறுஞ்செய்தி மூலமாக ஹேக்கிங் லிங்க் ஐ அனுப்பி ஹேக் செய்து வரும் இணையதள குற்றவாளிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற அதே குறுஞ்செய்தி வாயிலாக எச்சரித்து வருகிறது.
ATTOTTNL என்ற பெயரில் வரும் குறுஞ்செய்தியில் உங்களுக்கு வரும் குறுஞ்செய்தியில் இணையதள லிங்க் மற்றும் எண்கள் அடங்கிய லிங்க் போன்ற தகவல்கள் பயனாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது அதை கிளிக் செய்வதன் மூலம் உங்களது தகவல்கள் அல்லது உங்களது கைபேசி ஹேக் செய்யப்படும் அல்லது கண்காணிக்கப்படும் என எச்சரித்து வருகிறது.
உலகில் உள்ள பெரும்பான்மையான கைபேசி உபயோகிப்பாளர்களில் பெரும்பான்மையான தேவையில்லாத எஸ்எம்எஸ்களை பெறுவதில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். அதிலும் குறிப்பாக தாங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் நிறுவனங்களிடமிருந்தே அதிகம் பெறுகின்றனர்.
இதேபோன்று போலியான பெயரில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய அல்லது கண்காணிக்க கூடிய லிங்களை உள்ளீடு செய்து பயனாளர்களுக்கு அனுப்பிவைத்து அவர்களின் தனிநபர் விபரங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.