உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது? அதைத் தெரிந்து கொள்வது எப்படி!
சில வருடம் முன்பு ஒரு சிம் கார்டை வாங்கிவிட்டு அதை Activate செய்வதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்!
அதுவும் வார இறுதி நாட்கள் விடுமுறை என்பதால், 4 முதல் 5 நாட்கள் வரை கூட சில சமயங்களில் ஆகலாம். ஆனால் தற்பொழுது இப்படி எல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்று ஒரு சிம் கார்டினை நாம் வாங்குகின்றோம் என்றால், வாங்கிய சில நிமிடங்களில் அந்த சிம் கார்டினை நாம் Activate செய்ய முடியும். சிம் கார்டின் பயன்களை முழுவதுமாக நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதாவது அந்த சிம் கார்டின் இணைய சேவைகள், அழைப்பைப் பெறுதல் மற்றும் புது அழைப்புகளை மேற்கொள்ளுதல் போன்ற(Incoming மற்றும் Outgoing) போன்ற அனைத்து சேவைகளையும் நாம் முழுமையாக பயன்படுத்த முடியும்.
இந்த அளவுக்கு வேகமாக தொழில்நுட்பம் வளரும் பொழுது கூடவே சில ஆபத்துகளும் வளர ஆரம்பிக்கின்றன?
ஆபத்தா! என்ன ஆபத்து!
ஆபத்து என்றால் நம்மிடம், டிஜிட்டல் உலகின் தவறான அணுகு முறைகளைப் பயன்படுத்தி நம்மிடம் பணத்தைத் திருடுவது மட்டும் அல்ல!
நம்முடைய பெயரில் நம் அடையாளங்களைப் பயன்படுத்தி ஒரு சிம் கார்டின் யாரோ ஒருவர் வாங்கி விட முடிவதும் ஒரு ஆபத்து தான்!
இது போன்ற செயல்களைக் குறைப்பதற்காகவே தற்போது அரசால், சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நம் கைரேகை மூலம் சிம் கார்டு வழங்கும் நடைமுறை செயல்படுத்தப் பட்டு வந்தாலும், நாம் இந்த முறைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் பழைய நடைமுறையான நம்முடைய அடையாளங்களை கொடுத்து சிம் கார்டு வாங்கி இருந்தால் கூட அது இப்பொழுது கூட இந்த சிம் கார்டுகள் இயக்கத்தில் இருக்க அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது.
அது மட்டும் அல்லாமல் நம்முடைய பெயரில் மொத்தமாக எத்துனை சிம் கார்டுகள் உள்ளது பற்றி நமக்கு உண்மையான தகவல் இன்றுவரை கிடைப்பதில்லை
இதனால் நம்முடைய அடையாளங்களில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அல்லது இயக்கத்தில் உள்ளது எனபது பற்றி நம்மில் பலருக்கு தெரியாமலே இருக்கக்கூடும். இதைக் கண்டுபிடித்து புகார் அளிப்பதற்காக ஒரு இணையதளம் தற்பொழுது பயன்படுத்தப் பட்டு வருகின்றது.

கீழே அந்த இணைய தளத்திற்கான இணைப்பு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க்-ஐப் பயன்படுத்தி நீங்கள் அந்த இணைய தளத்திற்குள் செல்ல முடியும். நீங்கள் அந்த இணையதளப் பக்கத்திற்குள் சென்றவுடன் நீங்கள் வைத்துள்ள ஒரு மொபைல் எண்ணை பதியச் சொல்லி கேட்கின்றது.
பின்னர் அந்த எண்ணிற்கு ஒரு OTP பெறப்பட்டு அதை உள்ளிடச் சொல்கின்றது. நாம் OTP-ஐ கொடுத்தவுடன் அந்த எண்ணிற்கான அடையாளத்தை பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ள அனைத்து மொபைல் எண்களையும் நமக்கு உடனடியாகக் காண்பிக்கின்றது.
மொபைல் எண்ணின் முதல் இரண்டு நம்பர்களை காண்பித்து பின்னர் அடுத்த நான்கு எண்கள் மறைக்கப்பட்டு, அடுத்த நான்கு எண்களை நமக்கு காண்பிக்கின்றது.
நாம் நமது குடும்பத்திற்கோ அல்லது நண்பர்களுக்கோ நம் அடையாளத்தைப் பயன்படுத்தி சிம் கார்டினை வாங்கி கொடுத்து இருந்தால் முன் மற்றும் பின் உள்ள எண்களைக் கொண்டு எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

ஆனால் நமக்கு சந்தேகம் அடையச் செய்கின்ற நமக்கு தெரியாத நம்பர்களை காண்பித்தால் நாம் அந்த எண் நம்முடையது அல்ல என்ற கொடுக்கப்பட்டுள்ள ஆப்சனை பயன்படுத்தி புகார் அளிக்க முடியும்.
புகார் அளித்தவுடன் உடனடியாக என்ன நடக்கும்? நம் பெயரில் உள்ள நமக்கு தெரியாத எண்கள் நீக்கப்படுகின்றதா? இதற்கு அடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நாம் அடுத்த கட்டுரையில் தெளிவாகக் காணலாம்.
புகார் அளிப்பதற்கான இணைய இணைப்பு!