இணையதள பாதுகாப்பு

Mobikwik பயனாளர்களின் தகவல்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது..

பெரும்பான்மையான இந்தியர்கள் செல்போன், டிடிஹெச் , கரண்ட் பில் , கிரெடிட் கார்ட் பில் டேட்டா கார்டு ரீசார்ஜ் , பிராட்பேண்ட் ரீசார்ஜ் , இன்சூரன்ஸ் , கூகுள் பிளே ரீசார்ஜ் ,போக்குவரத்து துரையின் அபராதம் கட்ட மற்றும் கேஸ் சிலிண்டர் புக்கிங் பணம் அனுப்புதல் லோன் பெறுதல் போன்றவற்றுக்காக 10 கோடிக்கும் அதிகமான நபர்களால் பயன்படுத்தி வந்த இணையதளம் தான் இந்த Mobikwik இணையதளம் .

இந்த  தகவல்களை தட்டி தூக்கி இணையதளத்தில் சில ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு செய்து வருகிறார் Jordan Daven என்கிற ஹேக்கர்.

10 கோடி Mobikwik பயனாளர்களின் தனிநபர் விவரங்கள் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் தகவல் திருட்டாக  சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

ஒரே நேரத்தில் 10 கோடி இந்திய பயனாளர்களின் தகவல்கள் வெளியாகி இருப்பது உலக அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபர் செக்யூரிட்டி துறையில் உள்ள தன்  ஆர்வலர்கள் சிலர் நடத்திய சோதனையில் இதுவரை 8 டெராபைட்(8 tb) அளவிலான தகவல்கள்,

இமெயில் ஐடி, போன் நம்பர், பெயர், முகவரி, அவர்கள் பயன்படுத்திய பாஸ்வேர்ட் ,ஜிபிஎஸ் லொகேஷன் மற்றும் அவர்களின் EKYC டாக்குமெண்ட் என அனைத்தையும் Mobikwik மெயின் சர்வரில் இருந்து ஹேக்கர்கள் திருடி உள்ளனர்.

Mobikwik தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ள நபரின் பெயர் “ஜோர்டன் டவின்” என்று கண்டறியப்பட்டுள்ளது .

பயனாளர்கள் அனைவரும் உடனடியாக அவர்களது பாஸ்வேர்டினை மாற்றுவதன் மூலம் அதில் இருக்கும் தங்கள் பணத்தையாவது மீட்டெடுக்க முடியும் என்கிறார்கள் . இதற்கு முன் நடந்த தகவல் திருட்டில்  ஏதாவது ஒரு குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே ஹேக்கர்கள் வெளியிட்டி ருப்பார்கள் ஆனால் இந்த முறை பயனாளர்களின் ஒட்டுமொத்த விவரங்களுடன் அவர்கள் பயன்படுத்திய பாஸ்வேர்டையும் சேர்த்து டார்க் வெப்-ல்  விற்பனைக்கு வைத்துள்ளது இதுவே முதல் முறை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *