உங்கள் மொபைலை ஹேக் செய்துதான் உங்கள் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை!
இந்த தலைப்பினை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் அல்லது ஆச்சரியத்தில் நீங்கள் இதைப் படிப்பதற்காக வந்திருக்கக் கூடும். தற்போது இந்த யுகத்தில் நீங்கள் உங்களை உங்களுடைய மொபைல்போன் அல்லது கேமிராவை பயன்படுத்தி மட்டும்தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் யாரோ ஒருவர் எடுக்கக்கூடிய செல்பியில் சிக்கி கொள்கிறீர்கள் அல்லது பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் சிக்கிக் கொள்கிறீர்கள்.
எனவே, தற்பொழுது உங்களுடைய மொபைல் போனில் மட்டும் தான் உங்களது புகைப்படம் இருக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான்? அதிலும் நாம் அதிகமாக இணையத்தில் தினந்தோறும் சுற்றி வருகின்றோம்.
வாழ்த்துக்கள்-ல் தெரிவிக்கின்ற இணையப் பக்கங்களில் ஆரம்பித்து வாட்ஸ்அப் வரை நம்முடைய புகைப்படத்தை பதிவேற்றி விடுகின்றோம். அவ்வாறு நாம் பதிவேற்றும் புகைப்படங்கள் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் பெரும்பாலும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை!
அதற்கு உதாரணமாக நாம் அனைவரும் பயன்படுத்தகூடியWhatsapp-ல் மட்டும் செய்யக்கூடிய சில தவறுகளை தற்பொழுது பார்க்கலாம்.
நீங்கள் உங்களது புகைப்படத்தை Whatsapp-ல் காட்சி படமாக (Display Picture or Profile Photo)-ஆக வைத்து விட்டு உங்கள் Whatsapp கணக்கில் சில மாற்றங்களை செய்யாமல் விட்டு விட்டால் அது உங்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஆபத்தாகக் கூட மாறிவிடலாம்.
எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு Default application என்று கூறும் அளவிற்கு அனைவராலும் பயன்படுத்தக் கூடியது இந்த வாட்ஸப் செயலி.
நாம் புதிதாக ஒரு Whatsapp கணக்கைத் துவங்குகின்றோம் அல்லது முன்னதாகவே நம்மிடம் இருக்கும் கணக்கை தொடர்கின்றோம் என்றால் நாம் அதில் சில settings-ஐ கண்டிப்பாக மாற்றி ஆக வேண்டும் ஒவ்வொரு கணக்கிற்கும் அவர்களுடைய பாதுகாப்பை எண்ணி Whatsappநிறுவனமானது பிரைவசிக்கான சில வழிமுறைகளைக் கொடுத்துள்ளது. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அதை பற்றி பெரிதாய் யோசிப்பதில்லை.
அதை ஏதோ ஒரு தேவையற்ற செயலாய் நினைத்துத் தள்ளி வைக்கின்றர்கள். ஆனால், அதன் மூலம் நம்முடைய புகைப்படம் மற்றும் நாம் ஆன்லைன் அதாவது Whatsapp –ற்கு வந்து செல்லும் நேரத்தைக் கூட நமக்கு யார் என்றே தெரியாத ஒருவரால் பார்க்க முடியும் என்று சொன்னால் அது புதிதல்ல. நாம் கணக்குத் துவங்கிய பின்பு அதில் கொடுக்கப்பட்டுல பிரைவசி மெனுக்களை நாம் நம்முடைய தேவைக்கு ஏற்ப மாற்றி வைக்க வேண்டும்.
எப்படி உங்களின் புகைப்படம் மற்றும் இதர செய்திகளை அடுத்தவர்கள் பார்க்கின்றார்கள்?
நாம் நம்முடைய கணக்கை துவங்கிய பின் அதில் கொடுக்கப்படுள்ள Privacy மெனுக்கள், நம்முடைய புகைப்படம், நம்மை பற்றிய ஒரு தொகுப்பு மற்றும் நாம் Whatsapp–ஐ பார்வையிடும் நேரம் குறித்த தகவல்களை யார் யார் பார்க்க வேண்டும் என்பது போன்ற சில மெனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை நம்மில் எத்தனை பேர் பயன்படுத்துகின்றோம் என்பது சந்தேகமே.
உதாரணமாக நம்முடைய புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், அல்லது நாம் சேமித்து வைத்துள்ள நபர்கள் மட்டும் பார்க்கலாம் மற்றும் யாருமே பார்க்க வேண்டாம் என்பது போன்ற மெனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் .
நாம் அதில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற ஆப்சனை கொடுத்து விட்டோமேயானால் நம்முடைய புகைப்படத்தை நமக்கு யார் என்றே தெரியாத யாரோ ஒருவர் கூட, நமது நம்பரை சேமிப்பதன் மூலம் எளிமையாக பார்த்து விட முடியும். இதற்கு அவருக்கு ஹேக்கிங் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!
புகைப்படம் மட்டும் அல்லது நாம் எழுதி வைத்துள்ள சில குறிப்புகள் நாம் Whatsapp – ஐ பார்வையிடும் நேரங்கள் உட்பட அனைத்தையும் பார்வையிட முடியும்.
இப்படி ஒரு விஷயம் இருப்பதை அறிந்திராத பெண்கள் பலர் இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ள அதிகளவில் வாய்ப்புகள் இருக்கின்றது. ஒரு சாதாரண செய்கையின் மூலம் யாரோ ஒருவர் நம்முடைய புகைப்படத்தை அடையாளம் காண முடியும் என்பது டிஜிட்டல் உலகின் மிகச் சாதாரமான ஒரு விஷயமாகிப் போகின்றது.அது மட்டும் அல்லாது ஒவ்வொரு இணையப் பயன்பாட்டிலும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பிரைவசி பாலிசி-ஐ சரியாகப் பயன்படுத்தினாலே நாம் இந்த சைபர் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிகளை உருவாக்க முடியும். சரி இந்த Whatsapp-ல் எவ்வாறு settings-ஐ மாற்றி அமைக்க வேண்டும்?
Everyone என அதில் Option இருந்தால் அதை உடனடியாக My contacts என்ற Option-ஐ மாற்றம் செய்யுங்கள்.
உங்களுடைய Data வை யாரும் பார்க்க வேண்டாம் என நீங்கள் விரும்பினால், Nobody என்ற option– ஐ கூட நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு எத்தனை பிரைவேசியை அளித்தாலும், அதன் பயனாளர்கள் வாட்ஸ்அப் போன்ற வேறு ஒரு ஆப்ஸ்-களை பயன்படுத்தி தனது பிரைவசியை எளிதாக மற்றவர்களுக்கு காண்பித்து விடுகின்றார்கள்.
Whatsapp மட்டும் அல்லாமல் முகநூல் இன்ஸ்டாகிராம், லிங்கிட்-ன், ட்விட்டர் போன்ற அனைத்து பயன்படுகளிலும் இந்த பிரைவசி என்ற ஒரு விஷயம் கண்டிப்பாக கொடுக்கப்பட்டிருக்கும். அதனை ஒவ்வொருவரும் அவர்களின் தேவைக்கேற்ப மாற்றி வைத்துக் கொண்டு, உங்களின் பாத்துக்காப்பை அதிகமாக்கிட Cyberlites விரும்புகின்றது.