ஃபேஸ்புக் ஜியோ வாடிக்கையாளர்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்

 

இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனங்களின் கடும் போட்டிக்கு நடுவே கால் பதித்த ஜியோ நிறுவனத்தின் பல்வேறு சலுகைகளை அடுத்து பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எஸ்எம்எஸ்களை இலவசமாகவே வழங்கி வருகிறது.

 

 வளர்ந்து வரும் இணையதள உலகில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற செய்தி பறிமாற்ற செயலிகளின் வரவால் தற்பொழுது எஸ்எம்எஸ் ன் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது.

 

 90 சதவீதத்திற்கும் அதிகமான கைபேசியில் உபயோகிப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தாமலே உள்ளனர். (இதுகுறித்து சைபர்லைட்ஸ் கட்டுரையை படிக்க)

 

 இந்தியாவில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேவையில்லாத எஸ்எம்எஸ்களை அனுதினமும் பெற்று வருகின்றனர் அதில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் இருந்து வருகிறது, இந்த நிலையில் இந்த பயன்பாடற்ற கிடைக்கும் இந்த எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு போன்களை ஹேக் செய்து வருகின்றனர் சில ஹேக்கர்கள்.

இது போன்ற எஸ்எம்எஸ்  வந்தால் நீங்கள் ஹேக் செய்யப்படலாம்.

 ஒரு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தன்னிச்சையாக செயல்படும் கூடிய ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி அதை சில வெப் சைட் களில் அப்லோட் செய்வது ஒரு குறிப்பிட்ட செய்தியை டைப் செய்து கைப்பேசி பயனாளர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

 

 இந்தியாவில் பெரும்பாலானோர் ஜியோவுக்கு படையெடுத்து உள்ள நிலையில் அந்த குறுஞ்செய்தியில் ஜியோ ஃபேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து 25 ஜிபி இன்டர்நெட்டை இலவசமாக தருவதாக கூறி கீழ்க்கண்ட செயலியை இன்ஸ்டால் செய்தால் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் என்று பகிர்ந்துள்ளனர்.

இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் பலரும் இந்த செயலியை இன்ஸ்டால் செய்து உள்ளனர் பார்ப்பதற்கு JIO ஆப் போன்று இருப்பதால் இன்ஸ்டால் செய்த அடுத்த கணமே அந்த கைபேசியை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து எஸ்எம்எஸ்களை தன்னிச்சையாக அனுப்பும்படி செயல்படுகிறது இன்ஸ்டால் செய்யப்பட்டவரின் கைபேசியில் உள்ள அனைத்து எண்களுக்கும் இந்த குறிப்பிட்ட தகவல்களுடன் அந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யும் லிங்கையும் நினைத்து நினைத்து அவர்களுக்கு தெரியாமலேயே அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறது.

 இதனால் எந்த அப்ளிகேஷன் அசுர வேகத்தில் இந்தியா முழுவதும் பரவி வருகிறது இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வதால் செய்வதால் உங்கள் எஸ்எம்எஸ் மட்டும் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதில்லை உங்கள் கைபேசி அவர்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் ஆகவே இது போன்று எஸ்எம்எஸ்கள் கீழ் வரும் லிங்கை கிளிக் செய்து அதை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும் இதனால் நீங்கள் பாதிப்படைவதை விட உங்களுக்கு தெரியாமல் உங்கள் நண்பர்களும் பாதிக்கப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *