Cloudflare Free VPN For mobil user

இலவச அதிவேக VPN சேவை வழங்கும் Cloudflare

Cloudflare மொபைல் வாடிக்கையாளர்களுக்காக  VPN to its 1.1.1.1 DNS resolver app என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் வெளிவந்த The 1.1.1.1 service யை புதுப்பிக்கும் விதமாக பல்வேறு மாறுதல்களை செய்து மொபைல் பயன்பாட்டாளர்களின் இணைய வேகத்தை அதிவேகமாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிக வேகத்தில் இணைய சேவை!

Cloudflare மூலமாக உங்கள் இணைய பயன்பாட்டை தொடங்கும் பொழுது உங்கள் இணைப்பின் DNS யை செயல்படுத்துகிறது. இதனால் உங்கள் மொபைல் நெட்வொர் மூலமாக நீங்கள் பெரும் வேகத்தை விட அதிக வேகத்தில் இணைய சேவையை பெற முடியும்.

பல்வேறு பாதுகாப்பு செயல்முறைகள்.

Cloudflare உங்களுடைய நெட்வொர்க் நெரிசலை (traffic) மாற்று வழியில் செயல்படுத்துகிறது இதனால் மற்றவர்களை காட்டிலும் உங்களால் எளிதில் தகவலை பெற முடியும்.

மேலும் நீங்கள் தேடும் தகவல்கள் அனைத்தும் encrypts செய்யப்பட்டு உங்கள் தகவல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.

நாடுவிட்டு நாடு சாத்தியமில்லை…!

மற்ற VPN களில் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு ஒரே கிளிக்ல் நாடு விட்டு நாடு சென்று உங்கள்  தேடல்களை செய்ய முடியும். இதனால் உங்கள் தனியுரிமை கொள்கை பாதுகாக்கப்படுவதுடன் உங்கள் மீதான தனிநபர் கண்காணிப்பை தவிர்க்க செய்கிறது.

ஆனால் Cloudflare அதை செய்வதில்லை மாற்றாக உங்கள் இணைய வேகத்தையும் தனிநபர் தகவல் பாதுகாப்பை பட்டுமே உறுதி  செய்கிறது, ஆனாலும்  Warp should reduce data களை Cloudflare பெற்றுக்கொள்ள நிறையவே வாய்ப்பும் உள்ளது .


2019 இன் சிறந்த Free and Paid VPN பட்டியலை காண..

Cloudflare கண்காணிப்பு பணிகளில் ஈடுபடாது!

Cloudflare ஒருபோதும் பயன்பாட்டாளர்களின் விவரங்களையோ பயன்பாட்டு தகவலையோ கண்காணிகாது என்றும் முக்கியமாக விளம்பர நிருவனங்களுக்கு வழங்கப்படாது என்றும் கூறியுள்ளது.

மேலும் 1.1.1.1 ஆப் பயன்படுத்துபவராக இருந்தால் மேற்கண்ட அப்டேட்களின் Notification களை பெறலாம். இந்தியாவில் இந்த ஆப் பயன்படுத்த அனுமதி தொடர்ந்து கிடைத்தால் தனிநபர் தகவல்களை பாதுகாக்க நினைக்கும் ஒவ்வோருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *