மற்றவர்களின் மொபைலை தொடாமல் ஹேக் செய்ய வேண்டுமா?

Disclaimer: Cyber lights do not emit any harmful news. The news is published for educational purposes only. And publishes any news innovatively

நம்மில் பலரும் ஹேக்கிங் பற்றி அறிந்திருக்க கூடும். ஹேக்கிங் என்றால் என்ன என்பது பற்றி நம்முடைய Cyberlites குழு ஒரு தெளிவான விளக்கத்தை பல மாதங்களுக்கு முன்பே அளித்திருந்தது. படிக்க. அதுபோல நம்மில் பலரும் நம்முடைய நண்பர்களுடைய மொபைலை ஒருமுறையாவது ஹேக் செய்ய வேண்டும் என நினைத்திருப்போம். அதற்காக சில முயற்சிகள் கூட எடுத்திருப்போம்.

உண்மையில் ஒருவருடைய மொபைலை தொடாமல் ஹேக் செய்வது சாத்தியமா என்ற கேள்விக்கு இரும்புத்திரை படத்தில் கூட சில காட்சிகளை கொடுத்திருப்பார்கள்.

நாம் பெரும்பாலும் நம்முடைய நண்பர்களுடைய மொபைலை தொடாமல் ஹேக் செய்வது எப்படி என Youtube , கூகிள் போன்றவற்றில் தேடி இருக்கலாம்.

எப்படி ஹேக் செய்வது என்ற Keyword-களை  கொடுத்தவுடன் அது நொடிப்பொழுதில் நமக்கு பல வீடியோக்களையும் , இணையப் பக்கங்களையும் காண்பிக்கின்றது. அதில் பெரும்பாலும் நாம் நினைத்தது போலவே பெரும்பாலானவற்றை நமக்குக் காண்பிப்பதால் நாமும் உடனடியாக அந்த வீடியோ-வை கிளிக் செய்து பார்ப்போம். உடனே அந்த வீடியோ வில் யாரோ ஒருவர் உங்களுடைய நண்பர்கள் மற்றும் காதலர்களின் மொபைலை ஹேக் செய்ய வேண்டுமா? அவர்கள் மொபைலில் பேசுவதை நீங்களும் கேட்க வேண்டுமா எனக் கூறி அதற்காக இந்த ஆப்- ஐ இன்ஸ்டால் செய்யுங்கள், அந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்யுங்கள் என பல ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யச் சொல்லி சொல்லுவார்கள்.

நாமும் கொஞ்சமும் யோசிக்காமல் உடனடியாக அவற்றை முயற்சி செய்து பார்ப்பதற்காக இன்ஸ்டால் செய்ய துவங்கி விடுவோம். ஆனால், அதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை பற்றி பெரும்பாலும் கவலைப் படுவதில்லை. இதில் செய்யப்படும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியே பரிசாகக் கிடைகின்றது. ஆனாலும், உடனடியாக இவர்கள் நிறுவப்பட்ட இந்த ஆபத்தான ஆப்ஸ்களை அன்-இன்ஸ்டால் செய்வதில்லை. அவை இவர்களுடைய மொபைலில் தங்கி வேலையைக் காட்ட ஆரம்பிக்கின்றது. இந்த ஆப்ஸ்கள் நம்முடைய மொபைலில் இறங்கியவுடன் அவற்றை பின் புலத்திலிருந்து இயக்குபவரின் கைகளுக்கு நம்முடைய மொபைலில் உள்ள தகவல்களை பரிசாகக் கொடுக்கின்றது.

இவை நம்முடைய பணத்தை சுரண்டும் ஆபத்தான ஹேக்கர்களுடைய ஆப்ஸ்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிகப்படியான விளம்பரங்களை அள்ளித் தரக்கூடிய adwords-கள் முதல் நம்முடைய பிரைவசிக்கு உலை வைக்கும் ஆபத்துகள் வரை ஏற்படுத்தகூடிய பல வேலைகளை உடனடியாக ஆரம்பித்து விடுகின்றது.

யாரோ ஒருவர் இவர்களுடைய மொபைலை இயக்கிக் கொண்டிருக்கின்றார் அல்லது இவர்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தகூடிய பல செயல்பாடுகள் நடக்க ஆரம்பிப்பதை இவர்களுக்கு வெகு தாமதமாகவே தெரிய வருகின்றது.

இதுவரை நம்மில் பலரும் இது மாதிரி தவறுகளை செய்திருக்கக்கூடும். இதுபோன்ற நாம் ஒருவரின் மொபைலை தாக்குவதற்காக இந்த ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யும் பொழுது அந்த ஆப்ஸ்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கி முதலில் இன்ஸ்டால் செய்யப்படும் நம்முடைய மொபைலின் கதியை இவர்கள் ஏன் யோசிக்கவில்லை?

நம்மில் பலர் இதுபோன்ற வீண் ஆசைகளால்  சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போல பலரும் இது போன்ற தவறுகளை செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.

ஒருவரின் அனுமதியின்றி அவர்களுடைய கணினி மொபைல் போன்ற சாதனங்களில் உள்ள தகவல்களைத் திருடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும், இது போன்ற  வீண் ஆசைகளால் நாமும் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்க நேரிடுகின்றது.

சைபர்லைட்ஸ் குழு சைபர் உலகில் நடக்ககூடிய பல குற்றங்களையும் , பல விழிப்புணர்வு பதிவுகளையும் தொடர்ந்து எழுதி வருகின்றது. மேற்குறிப்பிட்ட செய்தி போல பல இடத்தில பல நண்பர்கள் ஆபத்தில் சிக்குவதாக சைபர் லைட்ஸ் க்கு வந்த புகாரின் அடிப்படையில் இந்த செய்தியினை சைபர்லைட்ஸ் குழு வெளியிட்டுள்ளது. இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்திகளை நீங்கள் படிப்பதோடு மட்டும் அல்லாமல் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!

Disclaimer: சைபர் லைட்ஸ் எந்த தீங்கு விளைவிக்கும் செய்தியையும் வெளியிடுவதில்லை.
முழுக்க முழுக்க கல்வி நோக்கத்திற்காக மட்டுமே இதில் செய்திகள் வெளியிடப்படுகின்றன
மற்றும் எந்த ஒரு செய்தியையும் புதுமையாகவே வெளியிடுகின்றது.

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *