IoT Advantech நிறுவனம் மீது Ransomware Attack!

IOT Advantech என்னும் பிரபல Software நிறுவனத்தின் மீது சமீபத்தில்  Ransomware தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதில் conti Ransomware என்னும் சைபர் தாக்குதல் இதன்மீது நடத்தப்பட்டுள்ளது. இதற்கான மீட்கும் தொகையை ஹேக்கர்கள் 750 Bit காயின்களாக கேட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதன் இந்திய மதிப்பு சுமார் 100  கோடியைத் தாண்டும்.

ஆனால் இந்த சைபர் தாக்குதல் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த தொகையை கொடுக்க தவறினால் அல்லது மீண்டும் அவர்களது ஹேக்கர்கள் குழுவை தொடர்பு கொள்ள தவறினால் திருடப்பட்ட Data-க்களை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

Conti Ransomware

இது ரான்சம்வேரின் அடுத்தடுத்த புதிப்புகள் ஆகும். ரான்சம்வேர் தாக்குதலின் ரியூக் ரான்சம்வேர்-ன் அடுத்தது இந்த Conti Ransomware ஆகும். இதில் திருடப்படும் தகவல்கள், தங்களது கோரிக்கையை மீறி நடக்கும் பட்சத்தில் Darkweb-ல் இந்த தகவல்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Send this to a friend