Windy App-ஐ பயன்படுத்துபவரா நீங்கள்? Windy இப்படித்தான் வானிலை அறிக்கையை கொடுக்கின்றார்கள்!

Windy என்பது வெப்பநிலை, மழை, புயல் குறித்து அறியும் ஒரு இணையதள செயல்பாடு. இதனை நாம் இணையப் பக்கமாகவும், செயலியாகவும் பயன்படுத்தி வருகின்றோம். Windy உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெறுகின்றது. இந்திய அளவில் மட்டும் 160 வது இடத்தில் அதிக பார்வையாளர்களை பெறக்கூடிய பட்டியலில் உள்ளது.

புயல் வரும் முன்னரே நாம் windy செயலியில் ஆராயத் தொடங்குகின்றோம். ஆனால் நாம் பார்க்கக்கூடிய புயலின் சூறாவளிக்காற்று போன்ற இயங்கு படங்கள் உண்மைதானா? அவை ஏற்படுத்தும் நகர்வுகள் உண்மையான காற்றின் நகர்வுகளா? சொந்தமாக Satelite கூட இல்லாத இந்த windy என்ற நிறுவனம் நமக்கு எவ்வாறு இந்த இயங்கு படங்கள் மற்றும் வெப்பநிலை குறித்த செய்திகளைத் தெரிவிக்கின்றது?

Windy App-ஆனது முதன்முதலில் 2014-ம் ஆண்டு ஐவோ லுகானோவிச் என்பவரால் உருவாக்கப்பட்டது. புயலின் சூறாவளிக்காற்று போன்ற இயங்கு படங்களை Glopal Forecast System என்ற அமெரிக்காவின் தேசிய வானிலையை கணிக்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து தகவல்களைப் பெறுகின்றது.

இது மட்டும் அல்ல  Windy நிறுவனமானது ECMF என்று அழைக்கக்கூடிய மற்றும் European Centre for Medium-Range Weather Forecasts என்று அழைக்கக்கூடிய ஐரோப்பிய நாட்டில் இயங்கும் வெப்பநிலையை  ஆராய்ந்து கூறும் நிறுவனத்திடமும், Nano Electro Mechanical Systems(NEMS) என்ற காற்றில் உள்ள வேதிப் பொருட்களின் தன்மையை ஆராய்ந்து அதன் மூலம் வெப்பநிலையை கணிக்கும் தொழில் நுட்பத்தின் உதவியுடனும் Data-க்களை நமக்கு வழங்குகின்றது.

இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தியே Windy நமக்கு புயலின் நகர்வு போன்ற காட்சிகளையும், காற்று வீசுவது போன்ற இயங்கு படங்களாக உள்ள காட்சிகளையும் நமக்கு காண்பிக்கின்றது.

கிட்டத்தட்ட 6 வருடங்களில் Windy இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மட்டுமே நமக்கு செயற்கைக்கோள் மூலம் எடுக்கும் படங்கள் போன்ற  காட்சிகளைக் கொடுக்கின்றது. சில நேரம் இவை ஓரளவு உண்மையான தகவல்களைக் கொடுத்தாலும் பல நேரங்களில் பொய்யான தகவல்களையும், போலியான காற்றின் நகர்வுகளையும் கொடுக்கின்றது. சில சமயங்களில் காற்று இல்லாத இடங்களில் கூட காற்று வீசுவதைப்  போன்ற சில நகர்வுகளை காண்பிக்கின்றது.

Windy தளத்திற்குள் செல்ல

 

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *