2020-ல் நடத்தப்பட்ட மிகப்பெரிய 10 சைபர் தாக்குதல்கள்

தற்போது சைபர் குற்றங்கள்(Hacking) ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சைபர் குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

 உலகம் முழுக்க 39 நொடிகளுக்கு ஒருமுறை சைபர் குற்றமானது நடைபெறுவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது

 

Top 10 Cyber Crimes In 2020

நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வந்த நேரத்தில் உலகம் முழுக்க தற்போது பரவிய கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பல மடங்கு சைபர் தாக்குதல் அதிகரித்துவிட்டது.

2020-ல் பல இடங்களில் ஹேக்கர்களால் சிறு இரக்கமும் இல்லாமல் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த வருடத்தில் மட்டும் நடந்த மிகப்பெரிய அளவிலான 10 சைபர் தாக்குதல்களை தற்போது காணலாம்.

முதல் அடியாக ஜனவரி முதல் தேதியிலேயே Travelex என்ற பிரபல கிரெடிட் கார்டு அளிக்கும் லண்டன் நாட்டை தலைமை இடமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ஆகும். ஹேக்கர்களால் இவர்களுடைய இணையப் பக்கம் சேதப்படுத்தப்பட்டது. இதை ஹேக் செய்த பின்னர் அவர்கள் கேட்கும் பணத்தை அளிக்காவிட்டால் அனைத்து தகவல்களையும் இணையத்தில் கசிய விடுவதாக மிரட்டினார்கள். இதனால் தாக்குதலுக்கு பின்னர் 2 வாரத்திற்கு  இதனுடைய அனைத்து செயல்பாடுகளும் offline சென்றன.

படிக்க 

ஜூன் மாதம் 9-ம் தேதி பிரேசிலுக்குச் சொந்தமான அவன் நிறுவனத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு சார்ந்த தகவல்கள் எந்த அளவுக்கு கசிந்துள்ளது என்பதை அந்நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து பின்பு சைபர் தாக்குதல் குறித்த அறிக்கையை வெளியிட்டது. மேலும் மற்ற நாடுகளான போலந்து மற்றும் ருமேனியாவில் உள்ள தங்களுடைய நிறுவனங்களின் தகவல்களை பாதுகாக்கவும் , கடுமையான உழைப்பை கொடுத்து மீட்டது. இதனால் அந்நிறுவனத்தின் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளும் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

அமெரிக்காவின் மீதான தாக்குதல் 

அமெரிக்காவின் cloud மென்பொருள் நிறுவனம் மீது இரண்டு மாதங்களுக்கு முன்னர் Ransomware தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதில் உள்ள மாணவர்களின் மொத்த தகவல்களும் கசியப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதைப்பற்றிய செய்தியை BBC நிறுவனம் மிகப்பெரிய அறக்கட்டளை ஒன்று சைபர் தாக்குதலுக்கு உட்பட்டிருப்பதாகவும் , அதில் உள்ள அனைவரின் தரவுகளும் ஆபத்தில் இருப்பதாகவும் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

படிக்க

தொழில்நுட்பத் துறையில் மிகபெரிய நிறுவனமான Cognizant ஏப்ரல்-17 Ransomware தாக்குதலுக்கு பலியானது. இது கிட்டத்தட்ட 37 நாடுகளில் தங்களுடைய நிறுவனங்களை நடத்தி வருகின்றது . தமிழ்நாட்டில் சென்னையில் இதனுடைய ஒரு கிளை அமைந்துள்ளது என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கக் கூடும். இந்நிறுவனம் Ransamware தாக்குதலுக்கு உட்பட நேர்ந்ததையும், இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் ஏப்ரல் 18 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது Cognizant நிறுவனம்.

Lloyd Bank

Top 10 Cyber Crimes In 2020

பிரபல Lloyd வங்கியானது தனது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகபடியான Spam போலியான தகவல்களை பெறுவதாக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவர்கள் பெரும் செய்திகளில் அதிகப்படியாக உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுளதாகக் கூறி சில தகவல்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற முயற்சிப்பதாகவும், அந்த இணையப் பக்கம் lloyd வங்கியின் இணையப் பக்கத்தை ஒத்து இருப்பதாவும் தெரிவித்துள்ளது.

 கொரோனா வைரஸ் பாதிப்பை பயன்படுத்தி கொரோனா பாதித்தவர்களிடம் சில தகவல்களை திருட ஹேக்கர்கள் முயற்சி செய்வதாக அதிக அளவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா விழிப்புணர்வு போன்ற Email-களை அனுப்பி அதன் மூலம் அவர்களிடம் பயத்தை ஏற்படுத்தி அவர்களிடம் இருந்து தகவல்களை பெற முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.கொரோனா காலத்தில் அதிகமாகிய spam message-கள் அதிகப்படியான phishing தாக்குதலை ஏற்படுத்தும் முறையில் பரவி வந்தது. இது உலகில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதையும் எடுத்துக் காட்டாக அமைந்தது.

Travelex  நிறுவனத்தை சிதைத்த ஹேக்கர் குழுமம் ஜெர்மனின் ஒரு பிரபல கார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை முற்றிலுமாக முடக்கியது. கிட்ட தட்ட 7 நாடுகளில் தங்களுடைய கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்த சைபர் தாக்குதலுக்கு பின்னர் திரும்புவதற்கு சில வாரங்கள் ஆனது.

நியூயார்க்-ன் பிரபல நிறுவனமான க்ரூப்மேன் சமீபத்தில் Ransomware தாக்குதலுக்கு உட்பட நேர்ந்தது. இந்த சைபர் கும்பல் 42 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், டொனால்ட் ட்ரம்பை பற்றிய தகவல்களை வெளியிடுவதாகவும் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியது.

உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான குரூஸ் கப்பல் ஆபரேட்டர் கார்னிவல் கார்ப்பரேஷன், குறிப்பிடப்படாத Ransomware தாக்குதலுக்கு பலியாகிவிட்டதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் ஒன்றின் ஒரு பகுதியை அணுகி குறியாக்கம் செய்துள்ளது. மேலும் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் தனிப்பட்ட தரவு ஆபத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் இரண்டாவது பெரிய மென்பொருள் விற்பனையாளர் மற்றும் ஐரோப்பாவில் ஏழாவது பெரிய மென்பொருள் ஏஜி 2020 அக்டோபரில் Ransomware தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனம் க்ளோப் Ransomware மற்றும் சைபர் கிரிமினல் கும்பலால் தாக்கப்பட்டதாக Indiatimes அதனுடைய செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது. 20 மில்லியனுக்கும் அதிகமான மீட்கும் தொகையை கோரிக்கையாக வைத்துள்ளது இந்த ஹேக்கிங் கும்பல். இந்த தாக்குதலில் இருந்து நிறுவனம் இன்னும் முழுமையாக மீளவில்லை.

Ransomware தாக்குதல் அதன் உள் வலையமைப்பின் ஒரு பகுதியை சீர்குலைத்ததாக இந்த நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது .

   ஆனால் கிளவுட் அடிப்படையிலான சேவைகள் உட்பட அதன் வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் பாதிக்கப்படாமல் சைபர் தாக்குதலில் இருந்து தப்பியது.

இந்த நிறுவனம் தாக்குதல் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றது. ஆனால், அது அனைத்தும் வீணானது.

மென்பொருள் ஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒழுங்கான செயல்பாட்டை மீண்டும் தொடங்குவதற்காக நிறுவனம் அதன் அமைப்பு மற்றும் தரவுத்தளத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *