மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியானது | Master Movie Leaked Online

நடிகர் விஜய்யின் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் மாஸ்டர் சினிமா அரங்குகளில் வெற்றிகரமாக வெளியாக இறுக்கின்றது. திரைப்படத்தின் டீஸரின் படி, விஜய் ஒரு கல்லூரியில் அதிக குடிகாரர் போன்று சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதாலும் அதன் விளைவாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. முன்னனி OTT தளங்களில் இருந்து லாபகரமான சலுகைகள் இருந்தபோதிலும், தயாரிப்பாளர்கள் தியேட்டர்களின் வெளியீட்டில் பெருமளவில் ஆர்வமாக இருந்தனர்.
இநிலையில் நேற்று மாஸ்டர் திரைப்படம் Online-ல் வெளியாகிய சம்பவம் பெரிய சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. படக்குழுவின் அனைவருக்கும் இந்த நிகழ்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் முழு படமும் வெளியாகவில்லை என்றும், படத்தின் ஒரு பாதி மட்டுமே வெளியாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தின் சில காட்சிகள் வெளியானதால் படக்குழு அந்த காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் எனவும் அறிவிப்புகள் வெளியிட்டிருந்தது. ஆனால் தற்பொழுது இந்த படத்தை இணையத்தில் பரப்பியதால் படக்குழு செய்வதறியாமல் திகைத்து வருகின்றது.

