Play store-ஆப்ஸ் மூலம் ஸ்மார்ட் போனை தாக்கும் ஜோக்கர் மால்வேர்கள்

Play store-ல்  பதிவேற்றப்பட்டிருந்த சில செயலிகளின் மூலம், புதிதாக ஜோக்கர் மால்வேர் என்ற புதிய வைரஸ், பொதுமக்களின் தகவல்களைத் திருடக்கூடிய செயலானது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

Quick Heal   நிறுவனம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், Play store-ல் இருந்து பதிவிறக்கப்பட்ட சில ஆப்ஸ்களை உடனடியாக ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

Play store-ன் சில ஆப்ஸ்களான

CAMSCANNER,

SUPER MESSAGE,

AUXILARY MESSAGE,

ELEMETRIC SCANNER,

TRAVEL WALPAPER,

BOX MAGIC SMS,

GO MESSAGES

போன்ற செயலிகள் முன்னதாகவே கூகிளின் Play store-ல் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் மக்கள் யாரும் இந்த ஆப்ஸ்களை முன்கூட்டியே பதிவிறக்கம்(Download) செய்திருந்தால் இதற்குமேல் இந்த ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், உடனடியாக இந்த ஆப்ஸ்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஆப்ஸ்களில் ஜோக்கர் மால்வேர் என்ற தீய மென்பொருளானது, பயனர்களின் தகவல்களைத் திருடும் தன்மை கொண்டது என்றும் எச்சரித்துள்ளது.

அதனால் இந்த ஆப்ஸ்களை மக்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்வதின் மூலம், தகவல்களைத் திருடும் இந்த மால்வேர்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்றும், Quick Heal நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *