49 இலட்சம் ஆதார் தகவல்கள் டார்க் இணையத்தில் கசிவு

இந்தியாவின் பெங்களூரு நகரைச் சேர்ந்த Technisanct சைபர் செக்யூரிட்டி நிறுவனம் சமீபத்தில் ஆதார் விபரம் திருட்டு குறித்த ஒரு குற்ற சம்பவத்தினை விவரித்துள்ளது.

டார்க் இணையத்தில் உள்ள ஒரு ஹேக்கரின் இணையதளத்தில், தற்பொழுது 49,19,668 உள்ளடக்கிய 5.3 மில்லியன் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தில் பயனடையும் நபர்களின் தகவல்கள் ஜூன்-28 ம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் Tnpds பயனர்களின் தரவுகளில் பயனாளி உறுப்பினர் ஐடி, ஆதார் எண், பயனாளிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், முகவரிகள், மொபைல் எண்கள், உறவுகள் மற்றும் பல உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கும்.

Tnpds இணைய தளமானது ஒரு சைபர் தாக்குதலுக்கு பலியானதையும், 1945 VN என்ற பெயரில் சைபர் கிரிமினல் குழுவால் ஹேக் செய்யப்பட்டிருப்பதும் தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது.

68 மில்லியனுக்கும் அதிகமான மொத்த பயனாளிகள் மற்றும் 67 மில்லியன் ஆதார் தகவல்கள் இந்த குறிப்பிட்ட இணைய போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளது Technisanct சைபர் செக்யூரிட்டி நிறுவனம்.

அடையாளம் காணப்பட்ட விதிமீறல் விற்பனையாளரால்(ஹேக்கரால்)  வெளியிடப்பட்ட தகவல் இந்த குற்ற சம்பவத்தின் ஒரு பகுதியாக மட்டும் இருப்பதற்கு ஒரு வாய்ப்பு உள்ளதாகவும்  இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *