கூடங்குளத்தை குறிவைக்கும் கொரிய ஃஹேக்கர்கள்…

koodankulam hacked by korean hackers

இந்திய அணு சக்தி கழகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் கணினிகள் முடக்கப்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் 4-ம் தேதி அன்று இந்த Hacking தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள்  கசிந்ததையடுத்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் காரர் சுப.உதயகுமார்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கூடங்குளம் அணுவுலையை சுற்றிய கிராமப் பகுதியைச் சேர்ந்த மக்களும் பல்வேறு வகையில் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இதனை தொடர்ந்து பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டிருந்த கூடங்குளம் அணு உலை நிர்வாகம்; சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும், கூடங்குளம் அணுவுலை நிர்வாக கணினிகள் முடக்கப்பட்டு செய்திகள் திருடப்பட்டதாக சொல்லப்படும்  செய்தியில் உண்மை இல்லை என்று மறுத்து இருந்தது.

இந்த நிலையில் கூடங்குளம் அணு உலை  நிர்வாகத்தின் கணினிகள் முடக்கப்பட்டு செய்திகள் திருடப்பட்டுள்ளது உண்மைதான் என வெளிவந்த செய்தி பெரும்  அதிர்ச்சியையும் அதிர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது.

D வைரஸ் பயன்படுத்தி

இன்டர்நெட்புரோட்டாகால் (Internet Protocol)

மேக் அட்ரஸ்(Mac Address)

வரலாறு(Browser History)

குக்கீஸ்(cookies) மற்றும் கணினியின்  இயங்கு தளம் பற்றிய முழு தகவல்களும் திருட பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் கொரிய நிறுவனம் ஒன்று இருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த வைரஸானது ஏடிஎம்களை ஹேக் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு வகை Virus ஆகும்.

இவை

 • Key logging
 • Retrieving browser history
 • Gathering host IP addresses,
 • information about available networks and active connections
 • Listing all running processes
 • Listing all files on all available disk volumes

போன்றவைகளையும் செய்யக்கூடிய திறன் கொண்டவையாகும்.

அணு உலை நிர்வாகத்தின் கணினிகள் இவ்வளவு சாதாரணமாக ஃஹேக் செய்யப்பட்டதா?

META SPLITOR FRAME WORK எனும் ஹேக்கிங் பயிற்சி பெறுபவ ர்கள் பயிற்சி செய்ய பயன்படுத்தும் எளிய  FRAME WORK-யை பயன்படுத்தி எடுக்கப்படும் தகவல்களைத்தான் இந்த D வைரசை பயன்படுத்தி திருடி இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வளவு எளிதாக திருடு போகும் வகையில் அணுவுலை சம்பந்தமான தகவல்களை வைத்திருப்பது  இந்த சம்பவத்திற்கு பின் பல்வேறு வகையான சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

ஒருவேளை இந்த கணினிகள்  முடக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அதில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் அந்த  கணினிகளை இயக்கவும் அதை பயன்படுத்தி அது இருக்கும் பகுதிகளை கண்காணிக்கவும் அதனை பின்கதவு வாயிலாகவும் இயக்க முடியும்  என்கிறார்கள் இணையதள வல்லுனர்கள்.

மற்றவர்களுடன் பகிருங்கள்
 • 135
 •  
 •  
 •  
 •  
 •  
  135
  Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *