கூகிள் என்னை கண்காணிப்பதுடன் தவறான தகவலை கொடுத்து குடும்பத்தில் பிரட்சனை

கூகுள் மேப் தவறான பதிவுகளை சேமிப்பதால் தன் குடும்பத்தில் நிம்மதி இழந்திருப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்தில் கூகிள் மீது புகார் அளித்துள்ளார்.  மயிலாடுதுறையை  சேர்ந்தவர் சந்திரசேகரன் மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

வீட்டிற்கு வந்ததும் அவரது செல்போனை அவரின் மனைவி சோதனை செய்வதை பழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார். அவர்  சென்று வந்த  இடங்களை கண்டறிய கூகுள் மேப்பில் டைம்லைனில் பார்த்துள்ளார், ஆனால் அதில் கூறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் கணவர் தன்னிடம் சென்றதாக சொல்லாத இடங்களாக இருந்துள்ளது.  இந்த  நிலையில் இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது  பலகட்ட சமாதானப் பேச்சுகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது .

“கூகுளை நம்பிய தன் மனைவி தன்னை நம்பாததால்” விரக்தி அடைந்த சந்திரசேகரன் பொய்யான தகவல்களை கொடுத்து தன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் கூகுள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதற்கான இழப்பீடு கேட்டும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொலை,கொள்ளை வழக்குகளை பார்த்த காவல்துறை சந்திரசேகரன் இந்த நூதன புகாரால் அதிர்ந்துபோயுள்ளனர்.

 

பாதிக்கப்பட்டவர்

இதுகுறித்து சந்திரசேகரனிடம் கேட்டபோது.

என் போனில் கூகிள் மேப் என்று ஒரு ஆப் இருக்கு அந்த ஆப்பில்  டைம்லைன் என்று ஒரு ஆப்ஷன் இருந்திருக்கு அந்த ஆப்ஷன் எல்லாம் என்னன்னு கேட்டீங்கன்னா எங்கே போகிறோம் வர்றோம்னு கண்காணிப்பது தான். அதில் குறிப்பிட்ட அளவே உண்மை இருக்கிறது அதில் அதிகம் உண்மைக்கு மாறான தகவல்களை கொடுப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்களும் குடும்பச் சிக்கல்களும் குடும்பத்தில் தேவையில்லாத ஒரு மன நிம்மதியைக் கெடுக்கிறது என்றார் .

புளுவேல் எப்படி சின்னப் பிள்ளைகளை  தற்கொலைக்கு தூண்டி ஆபத்தை ஏற்படுத்தியதோ அதே மாதிரி இன்னைக்கு மகிழ்ச்சியா இருக்கிற குடும்பத்துல இந்த ஆப் பிரட்சனைகளை உண்டாக்குகிறது என்கிறார். கூகிள் நிறுவனமே இந்த தவறுகளை திருத்தி தேவையானவர்களுக்கு மட்டும் இந்த சேவையை கொடுக்க வேண்டும் என்கிறார்.

சமீபத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் 99 Smart phone களை ஒரு கூடையில் போட்டு போலியான வாகன நெரிசல் இருப்பதாக கூகிளை நம்ப வைத்தார். இதுபோன்று குறைபாடுகளை வைத்துக்கொண்டு கூகிள் மேப் நிர்வாகம் அனைத்து பயனாளர்களுக்கும் அவர்கள் அனுமதி இல்லாமல் வர்கள் இருப்பிடத்தை கண்காணிக்க கூடாது என்பதே இணைய வல்லுனர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அரசும் கூகிள் CEO விடம் கேள்வியும் எழுப்பியுள்ளது.

இதுபோன்று நீங்கள் தவறு செய்யாமலே  உங்கள் மனைவியிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சைபர்லைட்ஸ் முன்பே கட்டுரை வெளியிட்டுள்ளது. 

கூகிள் உங்கள் இருப்பிடத்தை ட்ராக் செய்வதில் இருந்து தப்பிப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *