உங்களின் ATM கார்டு விவரங்கள் விற்கப்படுகிறதா…?

INDIAN ATM CARD DETAILS FOR SALE IN DEEP WEB

இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது.

டார்க் வெப் இல்  இயங்கிவரும் பிரபல டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு  விற்பனை சந்தையில்,ஹேக்கர்கள் ஹேக் செய்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விவரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த ஹேக்கர்கள் பெற்றுள்ள மொத்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் மதிப்பானது $130 million (around Rs. 900 crore) வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

சைபர்-பாதுகாப்பு நிறுவனமான குரூப்-ஐபி ஆராய்ச்சியாளர்களால் முதன்முதலில் இதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் ஜோக்கரின் ஸ்டாஷில்  என்ற டார்க் வெப் இணையதளத்தில் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் ஆனது “INDIA-MIX-NEW-01” என்ற  கோப்பின் பெயரில் பலதரப்பட்ட வங்கிக் கணக்குகளின் டெபிட் மற்றும் கிரெடிட்  காடுகளின் பெயர் மற்றும் கார்டு எண் காலாவதியாகும் தேதி CVV எண் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் வழங்குதல் பெயர் போன்ற முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் அமெரிக்க சந்தை மதிப்பில் $100 டாலர்கள் (இந்திய மதிப்பில் 7000 ரூபாய்)  டாலர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

“ஏடிஎம்களில் அல்லது பாயிண்ட் ஆஃப் சேல் (போஸ்)  முறையில் நிறுவப்பட்ட ஸ்கிம்மிங் சாதனங்கள் வழியாக அட்டை விவரங்கள் பெறப்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப தரவு பகுப்பாய்வு தெரிவிக்கிறது”

INDIAN ATM CARD DETAILS FOR SALE IN DEEP WEB

கார்டு டம்பில் “ட்ராக் 2 டேட்டா அடங்கும், இது வழக்கமாக ஏடிஎம் அட்டையின் காந்தக் கோட்டில்  காணப்படும் விவரங்கள் ஆகும்.

ட்ராக் 1 மற்றும் ட்ராக் 2 ஒருபோதும் பயன்படுத்தப்படாத வலைத்தளங்களில் (மேக்கார்ட் தாக்குதல்கள்) நிறுவப்பட்ட ஸ்கிம்மர்களை இந்த வகையான தரவுகளின் இருப்பு தானாகவே நிராகரிக்கிறது ”.

ஜோக்கரின் ஸ்டாஷிலிருந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை வாங்கும் குற்றவாளிகள்  பெரும்பாலும் வழக்கமான முறையான அட்டைகளை குளோன் செய்வதற்கும்

ஏடிஎம்களிலிருந்து பணத்தை எடுப்பதற்கும்  பயன்படுத்துகிறார்கள். பிப்ரவரி 2019 இல், 2.15 மில்லியன்  அமெரிக்கர்களின் ஏடிஎம் கார்டு விவரங்கள்ஜோக்கரின் ஸ்டாஷில் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

ஆகஸ்ட் மாதத்தில், பெட்ரோல் மற்றும் எரிவாயு  நிறுவனமான Hy-Vee  வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கிட்டத்தட்ட 5.3 மில்லியன்  ஏடிஎம் கார்டு விவரங்களும் மிக மோசமான இணையதளங்களில் கொட்டப்பட்டன.

கடந்த ஐந்து ஆண்டுகளில்  வால்மார்ட், சாக்ஸ் ஐந்தாவது அவென்யூ, லார்ட் & டெய்லர் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்களில் தரவு மீறல்களிலிருந்து திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளை கணிசமாக வெளியிடுவதன் மூலம் ஜோக்கரின் ஸ்டாஷ் முதன்மையான டார்க் வெப் இன் முன்னணி கிரெடிட் கார்டு கடைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இதுபோன்று இந்த ஹேக்கர் கும்பலின் டார்க் வெப் இணையத்தளமானது இதுவரை 5.3 மில்லியன் கிரெடிட் கார்டு எண்களை இந்த தளம்  வெளியிட்டுள்ளதாக பட்டியலிடுகின்றனர் சைபர் பாதுகாப்பு துறையினர்.

சைபர் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற்றதாக சொல்லப்படும் அமெரிக்கர்களின் விவரங்களையே மிகச்சாதாரணமாக Deep web -ல்  இடம் பெறச் செய்யும் ஹேக்கர்கள் தற்பொழுது இந்தியாவின் மீதும் தொடர் சைபர் தாக்குதலை ஏற்படுத்தி இந்திய மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்..

சைபர்லைட்ஸ் பரிந்துரைகள்..

சைபர்லைட்ஸ்  இணையத்தளமானது ஏற்கனவே இந்தியர்களின் விவரங்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளதாக  ஆதாரபூர்வமாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது.  (கட்டுரையைப் படிக்க) ஆனால் அந்த இணையதளம் இன்னும் இந்தியாவில் தடை செய்யப்படாமல் இந்தியர்களின் தனிநபர் விவரங்களை விற்பனை செய்து கொண்டு தான் உள்ளது.

இந்த நிலையில்  இந்தியாவில் பல்வேறு சைபர் தாக்குதல்களின்  தொடர்ச்சியாக இந்திய மக்களின் வங்கிக் கணக்கு விவரங்கள்  வெளியிடப்பட்டிருப்பது இந்திய அரசின்சைபர் பாதுகாப்பு துறை மீது மக்களுக்கு கடும்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை உங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு  விவரங்கள் Hack செய்யப் பட்டிருக்கக் கூடும் என எண்ணினால் நீங்கள் செய்யவேண்டியது.

  • உடனடியாக உங்கள்  வங்கியை தொடர்பு கொண்டு உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பிளாக்  பிளாக் செய்து மீண்டும் ஒரு புதிய அட்டையை பெறுவதே சரியாக இருக்கும்.
  • ஒருவேளை நீங்கள் நாம்தான் ஏடிஎம்   ரகசிய எண்ணை மாற்றி விட்டோமே என அலட்சியமாக இருந்தால் அந்த ரகசிய எண் மற்றும் OTP இல்லாமலே ஹேக்கர்களால் உங்கள் பணங்களை திருட முடியும்.
மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *