Instagram பயன்பாட்டாளர்களை பாதுகாக்க புதிய அம்சம் அறிமுகம்.

இணையதள குற்றவாளிகளுக்கு எதிராக தனது வாடிக்கையாளர்களை காக்க புதிய அம்சத்தை Instagram அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய அம்சத்தின் வாயிலாக ஒவ்வொரு Instagram வாடிக்கையாளரும் தங்களது உபயோகத்தின் போது தங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு இமெயில் ஒன்றை பெறுவார்.
மேலும் இணைய குற்றவாளிகள் அனுப்பும் ஈமெயில்களை கண்டறியவும் அதனை தடுத்து நிறுத்தும் வகையிலும் இந்த சிறப்பம்சமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நவீன இணையதள உலகில் பெரும்பாலான இணையதள குற்றவாளிகள் ஹேக்கர்கள் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து தகவல்களை திருடவும், பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தவும் , இந்த தூண்டில் முறையையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் மக்களிடம் மிகுந்த நம்பிக்கையை பெற்றிருக்கும் இணையதளங்கள் செயலிகள் போன்ற போலி இணைய தளங்களை உருவாக்கி அதில் பதியப்படும் தகவல்களை கொண்டு அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

Instagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்.
பொதுவாக Instagram அனுப்பியது போன்றே ஒரு போலியான இ மெயிலை அனுப்பி ஹேக்கர்கள் தங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு Instagram நிறுவனத்தின் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு Instagram இந்த செயல்முறையை கொண்டுவந்துள்ளது.
இனி Instagram ல் இருந்து பெறப்படும் வெரிஃபிகேஷன் ஈமெயில்கள் அனைத்திலும் இது Instagram இருந்துதான் பெறப்பட்டதா என்பதனை மக்கள் உறுதி செய்யும் வகையிலான அம்சம் தான் அது.
Instagram-ல் இருந்து பெறப்படும் ஈமெயில்களில் இருக்கும் இந்த சிறப்பு அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் மீண்டும் இன்ஸ்டாகிராம் இணைய தளத்திற்கு சென்று இது இங்கிருந்து பெறப்படும் என்று தான் என்பதனை உறுதி செய்கிறது.
இதனால் phishing முறையில் ஏமாற்றப்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும் என Instagram நம்புகிறது. இவ்வாறு அதிகாரப்பூர்வ ஈமெயில்கள் முழுவதும் பாதுகாக்கப்பட்டு இருப்பதால் செய்யும் ஆப்ஷன்களை ஹேக்கர்கள் அவ்வளவு எளிதில் போலியாக உருவாக்கி விட முடியாது என Instagram நம்புகிறது.
பெரும்பாலான தகவல் திருட்டு இந்த phishingமுறையை பயன்படுத்திய செய்யப்பட்டு வந்தாலும் மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இன்னும் இல்லாமலே இருக்கிறது. இதனால் ஒரு சிறுவனால் கூட இது போன்ற போலி இணையப் பக்கங்களை உருவாக்கி அதனை கொண்டு சமூக வலைத்தள கணக்குகளை கூட முடக்க முடிகிறது.
இதுபோன்ற இணையதள குற்றங்களையும் இணையதள குற்றவாளிகளையும் கருத்தில்கொண்டு Instagram எடுத்திருக்கும் இந்த ஆக்கப்பூர்வ முயற்சியை சைபர் உலகம் கொண்டாடி வருகின்றது.
Heads up: Today, we’re launching a new feature to help people identify phishing emails claiming to be from Instagram. This account security feature (accessed through Settings) allows anyone to check if an email claiming to be from Instagram is genuine. pic.twitter.com/3UE5kSypM6
— Instagram (@instagram) October 7, 2019
