Linkedin தகவல்கள் dark web-ல் கசிந்தது!

உலகின் மிகப்பெரிய வேலை தேடும் தளமான LinkedIn-இன் தகவல்கள் திருடப்பட்டு dark web-ல் வெளியிடப்பட்ட நிகழ்வு உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இதில் 500 மில்லியனுக்கும் அதிக அளவிலான பயனர்களுடைய தகவல்கள் முக்கியமாக அவர்களின் பெயர் ,முகவரி , இ-மெயில் முகவரி உள்ளிட்ட தகவல்கள் முற்றிலுமாக திருடப்பட்டு dark web-ல் வெளியிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு முகநூலின் 533 மில்லியன் பயனர்களுடைய தகவல்கள் கசிந்தது பெரிய தாக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று உலகில் வேலை தேடுவதற்காக LinkedIn-ல் தகவல்களை கொடுத்து வைத்திருந்த பல பேரின் தகவல்கள் கசிந்து அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் எந்த சந்தேகமும் இல்லை.

LinkedIn database leaked the dark web
மொபைல் எண் மட்டும் அல்லாது அவர்களுடைய பிற சமூக ஊடகங்களின் முகவரிகள், அவர்கள் குறித்து வைத்திருந்த வேலைகள் போன்ற பல தகவல்களையும், மொத்தமாக ஹேக்கர்கள் பதம் பார்த்துள்ளனர்.
இந்த தகவல் கசிவை ஒப்புக் கொண்டுள்ளவேலை LinkedIn நிறுவனம், தற்பொழுது தகவல் கசிவிற்கான பிரச்சினையைக் கண்டுபிடித்து அதனை சரி செய்துள்ளதாகவும், எங்களுடைய வாடிக்கையாளர்கள் முழுவதுமாக எங்களை நம்புகின்றனர் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடவுசொல்லை மாற்றி பின்னர் இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை பின்பற்றுமாறு ஒரு செய்தியினையும் LinkedIn நிறுவனம் அறிவித்துள்ளது.
