வைரஸ் லேப்டாப் 9 கோடிக்கு ஏலம்..

வைரஸ் லேப்டாப் 9 கோடி ரூபாய்

பொதுவா நாம லேப்டாப் வாங்கும்போது கூடவே வைரஸ்களிடம் இருந்து நம்மையும் நம் தகவல்களையும் பாதுகாத்துக்கொள்ள ஆன்டிவைரஸ் வாங்குவது வழக்கம்.

அப்படியும் ஏதாவது ஒரு வழியில் ஒரு வைரஸ் உள்ளே வந்து ஒட்டுமொத்த டேட்டாவையும் அபேஸ் செய்துவிட்டு போகும். அந்த வைரசை அழிக்க கூட முடியாமல் ஒட்டுமொத்தமாக os போட்டுவிடுவோம்.

ஆனால் Guo O Dong என்ற ஒரு சீன தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் உலகின் மிக மோசமான மற்றும் அதிக விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஆறு மால்வேர்களை கொண்ட லேப்டாப்களை இணையதளத்தில் விற்பனை செய்து வருகிறார்.

இந்த மால்வேர்களின் ஒரு சிறிய கசிவுகள் $95 பில்லியன் அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியவை மேலும் இந்த லேப்டாப் தகவல்களை பாதுகாக்கவும் கல்வி மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்ள மட்டுமே என அந்த இணையத்தில் கூறியுள்ளார்.

வைரஸ் லேப்டாப் 9 கோடி

இந்த லேப்டாப் எப்படிப்பட்டது?

Air-gapped Samsung NC10-14GB 10.2-Inch Blue Netbook லேப்டாப் விண்டோஸ் எக்பி ல் தான் இந்த ஆறு மால்வேர்களை நிறுவியுள்ளார். பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மால்வேர்களை விற்பனை செய்வது அமெரிக்காவின் மிகப்பெரிய குற்றமாகும்.

இருப்பினும் இந்த லேப்டாப் தடைசெய்யப்பட்ட மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அடிப்படியில் விற்பனைக்கு வைத்துள்ளார்.இதை piece of art” என குறிப்பிடுகிறார்.

வைரஸ்களை கட்டுப்படுத்துதல் என்பது இயலாத ஒன்று. ஆகவே நீங்கள் தலைகிழ் நின்றாலும் இதில் இணைய இணைப்பை பெற முடியாது.

malware laptop view cyberlites.com

அந்த மோசமான ஆறு மால்வேர்கள்.

இந்த லேப்டாப்ல் நிறுவப்படுள்ள அந்த பேராபத்தை நிகழ்த்தக்கூடிய ஆறு மால்வேர்கள்.

 • ILOVEYOU – இந்த வைரஸ் இமெயில் மற்றும் பகிர்வுகளின் போது வழங்க கூடியது உலகில் 500,000+ கணினிகளையும் தும்சம் செய்து முதல் வாரத்தில் $5.5பில்லியன் டாலர்களையும் ஒட்டு மொத்தமாக $15 பில்லியன் டாலர் அளவு பாதிப்பை ஏற்படுத்தியது.
 • MyDoom – ரஷ்யர்களால் நியமனமான e-mail spammersஆகும் இது உலகின் அதிவேக worms களை பரப்ப வல்லது.
 • இந்த வைரஸ் தாக்கம் $38 பில்லியன் டாலர் இழப்பை உலகெங்கும் ஏற்படுத்தியது
 • SoBig– worm மற்றும் trojan களை கொண்டதுதான் Sobig மால்வேர் இதுவும் இமெயில் மூலமாக பரவக்கூடியது. இது கணினியில் உள்ள தகவல்களை பிரதியெடுத்து தன்னிச்சையாக பிறருக்கு அனுப்பும். இந்த வைரசால் $37 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. மேலும் ஒருலச்சத்திற்கும் மேற்பட்ட கணினிகள் பயன்படாத நிலைக்கு சென்றது.
 • WannaCry – இந்த பெயரை நீங்கள் ஒருமுறையேனும் கேட்டிருப்பீர்கள். இந்த worm கணினியை பூட்டிவிட்டு பின்கதவு ஒன்றை ஹேக்கருக்கு உருவாக்கி கொடுக்கும்  உலக அளவில் 200,000+ கணினிகளை 150 நாடுகளில் முடக்கியது. $100M  டாலருக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதுடன் பல நிறுவனங்களை வீதியில் இறக்கி விட்டது.
 • DarkTequila– இது உங்கள் வங்கி மற்றும் பூட்டப்பட்ட தகவல்களை திருடும் இதனால் பல மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
 • BlackEnergy– இது ஒரு ஆல் இன் ஆல் மால்வேர் இருக்கும் அனைத்து பிராடு வேலைகளையும் கன கச்சிதமாக செய்து முடிப்பதுடன் கணினியை தாறுமாறாக இயங்க செய்து கருகிய வாடை வந்து அணையும் வரை வேலைபார்க்கும். 2015 ஆம் ஆண்டு Ukraine ல் நடந்த சம்பவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இந்த லேப்டாப்பை எப்படி வாங்குவது?

அமேசானில் ஆடர் போட்டால் அடுத்த நாள் கிடைக்குற மாதிரி இதை வாங்க முடியாது அவர்கிட்டே ஒன்னே ஒண்ணுதான் இருக்காம் .

அதனால் அந்த மனுஷன் ஒரு வெப்சைட் https://thepersistenceofchaos.com/ஒன்றை உருவாக்கி அதுல ஏலம் கேக்குறவங்க கேக்கலாம்ன்னு சொல்லிட்டாரு.

அதுல கடைசியா $1,345,000 டாலருக்கு யாரோ ஏலம் கேட்டுடாங்க.. இந்திய மதிப்புல ₹9,36,48,315.00 சாரி யூ ஆர் டூ லேட்…!!!

வைரஸ் லேப்டாப் சைபர்லைட்ஸ்

எதற்கு இந்த லேப்டாப்?

“piece of art” ன்னு சொல்ற இந்த லேப்டாப்புல உங்க தகவல் எதுவாக இருந்தாலும் பாதுகாப்பா வைக்கலாம் இன்டர்நெட் இல்லாததால ஹேக்கர்கள் உள்ள வர முடியாது.

சரி பென்ட்ரைவ் போட்டு திருடிரலாமுன்னு பாத்தா உள்ளே நுழையவே முடியாது அப்படியே நீங்க ஆட்டையை போட்டாலும் அதை உங்கள் கணினியில் சொருகினாலே கதை அம்பேல் தான்.

உங்கள் கேள்பிரண்ட் போட்டோவை பாதுகாக்க நினைத்தால் நிச்சயம் இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்க  வேண்டியதில்லை.

இராணுவ ரகசியங்கள் மற்றும் மருத்துவ ரகசியங்களை பாதுகாக்க இது உதவலாம்.

பொறுப்புத்துறப்பு

 • இங்கே பதிவிட்டப்படும் தகவல் அனைத்தும் கல்வி மற்றும் தற்காப்புக்காக மட்டுமே வெளியிடப்படுகிறது.
 • தகவல் திருட்டில் ஈடுபடுவதும் காப்புரிமை கொள்கையை அனுமதியின்றி பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டது மற்றும் சட்ட விரோதமானதாகும்.
 • ஹேக்கிங் மற்றும் மால்வேர் போன்றவற்றை நாங்கள் ஊக்குவிப்பதும் பயன்படுத்த கோருவதும் இல்லை
 • இந்த தளத்தில் கூறப்படும் தகவல் அனைத்தும் தகவலின் அடிப்படையிலேயே வெளியிடப்படுகிறது.
 • செய்தி அடிப்படையில் வெளியிடப்படும் தகவல்களை சோதனை செய்து பார்ப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு சைபர்லைட்ஸ் ஒருபோதும் பொறுப்பேற்காது
 • இந்த தளத்தில் உங்கள் காப்புரிமைகொள்கைகள் ஏதும் பயன்படுத்தப்பட்டு இருந்தால் உடனடியாக இங்கே  தெரிவிக்கவும். உடனடியாக அதை  நீக்கி விடுகிறோம்.
மற்றவர்களுடன் பகிருங்கள்
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *