இரண்டு சீன ஹேக்கர்களை தேடும் அமெரிக்க அரசாங்கம்…!

சீன அரசின் பிறநாட்டு சைபர் தாக்குதலுக்கான வேலைஆள்..

பிடி 10 என்ற தகவல் திருட்டு செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு சீன ஹேக்கர்கள்மீது அமெரிக்கா சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சீனாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போர்வையில் இவர்கள் சீன அரசின் பிறநாட்டு சைபர் தாக்குதலுக்கு வேலை செய்துள்ளனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

பிடி 10 என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சூ ஹுவா, ஷாங் ஷிலோங் ஆகிய இரண்டு சீன ஹேக்கர்கள், அமெரிக்க அரசாங்கம் மற்றும் சில தனியார் நிறுவனங்களில் முக்கிய தகவல்களைத் ஹேக் செய்ய வேண்டும் என பிரசாரம் செய்துள்ளனர்.

எம்எஸ்பிக்களைத் தாக்குவதன் மூலம் ஏபிடி 10 நிறுவனம், தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பெய்ஜிங்கின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்புடையவர்கள் இந்த ஹேக்கர்கள். மேனேஜ்ட் சர்வீஸ் புரொவைடர்ஸ் (எம்எஸ்பி) (Managed service providers) என்ற நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் சர்வர்கள், ஸ்டோரேஜ் மற்றும் ஐடி கட்டமைப்புகளை கண்காணிக்கும்.

இந்த எம்எஸ்பிக்களைத் தாக்குவதன் மூலம் ஏபிடி 10 நிறுவனம், தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளில் இந்தத் தகவல் திருட்டு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் எம்எஸ்பிக்கள் மூலமாக உலகின் பல நாடுகளின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தகவல் திருட்டில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவந்தது. இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் தகவல் திருட்டிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, யூகே, ஜெர்மனி, ஜப்பான், கனடா, ஸ்வீடன், பிரான்ஸ், பின்லாந்து பிரேஸில், சுவிஸர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளில் இந்தத் தகவல் திருட்டு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்க கப்பல்படையின் 40 கணினிகளை ஏபிடி 10 ஹேக் செய்துள்ளது.

வங்கி மற்றும் நிதித்துறை, எரிவாயு மற்றும் எண்ணெய், தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, மின்னணு பொருட்கள் தயாரிப்பு, சுரங்கம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த நிறுவனங்களில் இந்த தகவல் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க கப்பல்படையின் 40 கணினிகளை ஏபிடி 10 ஹேக் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ’சீனா, இந்தத் தகவல் திருட்டில் தாங்கள் ஈடுபடவில்லை என வெளியில் காட்டிக்கொள்ள மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும்’

என அமெரிக்க துணை அடார்னி ஜெனரல் ராட் ராஸண்டைன் இதுகுறித்து கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் மேலான கருத்துக்களை சைபர்லிட்ஸ் இணையத்திற்கு வழங்கிடுங்கள்.

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *