மிக மோசமான பாஸ்வேர்டுகள்…

பாஸ்வேர்டு பத்திரம்..!

நவீன மின்னணு உலகில் உங்களின் தேவைகள் மற்றும் வேலை நேரம்  மிச்சமாகிறது ஆனாலும் அதற்கேற்ப ஆபத்துகளும் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்றுதான் சோம்பேறித்தனமான பாஸ்வேர்டுகள்.

மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்டது. பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக மிகச் சாதாரணமான வார்த்தைகளையோ அல்லது எண்களையோ பலரும் பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் மிகவும் எளிதில் யூகித்து ஊடுருவக் கூடிய மோசமான பாஸ்வேர்டுகள் எவை என்ற சுவாரஸ்யமான தகவலை  ஸ்பிளாஷ் டேட்டா என்ற சர்வதேச பாஸ்வே‌ர்டு மேலாண்மை நிறுவனம்  வெளியிட்டுள்ளது. 1,2,3,4,5,6 என்ற 6 இலக்க எண்களே மோசமான பாஸ்வேர்டாக தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

 1,2,3,4,5,6 என்ற பாஸ்வேர்டை தொடர்ந்து, மோசமான பாஸ்வேர்டாக ‘பாஸ்வேர்டு’ என்ற சொல்லே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் டொனால்டு என்ற பெயரும் சேர்ந்துள்ளதாகவும், அது 23வது இடத்தில் உள்ளதாகவும் ஸ்பிளாஷ் டேட்டா தெரிவித்துள்ளது.

இதுதவிர குவெர்ட்டி, பேஸ்பால் போன்ற பெயர்களும் மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 

மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றில் எளிதாக ஊடுருவ முடிந்த 5 லட்சம் பாஸ்வேர்டுகளை ஆராய்ந்து இந்தப் பட்டி‌லை தயாரித்துள்ளதாக ஸ்பிளாஷ் டேட்டா கூறியுள்ளது.

உங்களின் கணக்குகள் அபேஸ் தான்.

பொதுவாக பயன்படுத்தாத சொற்களுடன் பல்வேறு வகைப்பட்ட சிறப்பு குறியீடுகளுடன் இயன்ற வரை நீளமானதாக உள்ள பாஸ்வேர்டே மிகவும் பாதுகாப்பானது என்ற ஆலோசனையையும் ஸ்பிளாஷ் டேட்டா தெரிவித்துள்ளது.

இல்லையென்றால் உங்களின் கணக்குகள் அபேஸ் தான். உங்கள் மின்னஞ்சல் பாஸ்வேர்டு தெரிந்து கொண்டாலே உங்கள் நண்பர்கள் விவரம் , சேமித்த தொடர்பு எண்கள் , டிரைவில் உள்ள புகைப்படங்கள் , மற்றும் நிங்கள் சென்றுவந்த இடங்கள் தேடியவை என அனைத்தயும் தெரிந்து கொள்ள முடியும் .

நம் அலச்சியதால் பலரின் வாழ்கை கேள்விக்குறியாக விடக்கூடாது. இனி ஒவ்வொரு கணக்கிலும் சிறந்த மற்றும் பாதுபாப்பான பாஸ்வேர்டுகளை நாம் நிறுவ வேண்டும்.

மேலும் உங்களுக்கு தெரிய வேண்டிய கேள்விகளை கமெண்ட் ல் கேளுங்கள்.

WWW.Cyberlites.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Send this to a friend