Tap ’n Ghost Attack மூலமாக ஆண்ட்ராய்டு மொபைலை ஹேக் செய்யும் ஹேக்கர்கள்

Tap ’n Ghost Attack மூலமாக ஆண்ட்ராய்டு மொபைலை ஹேக் செய்யும் ஹேக்கர்கள்

இந்த நவீன உலகில் ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்காத ஆட்களே கிடையாது என சொல்லலாம். ஹேக்கர்கள் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புது வழியில் தகவல் திருட்டை செய்ய தினமும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.

நாம் இன்று தெரிந்துகொள்ள வேண்டியது NFC enabled Android smartphone களில் போனின் டச் ஸ்கீன்யை தொடாமலே Tap ’n Ghost Attack மூலமாக ஆண்ட்ராய்டு மொபைலை ஹெக் செய்யும் முறை தான்.

இப்பொழுது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு wireless headphones, Fitness devices, contactless payment systems போன்ற ஏதாவது ஒரு சாதனத்தை தங்கள் மொபைல் போனுடன் இணைத்து உள்ளனர். தற்பொழுது ஹேக்கர்கள் இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

உங்கள் போன் NFC enabled Android (Wi-Fi, Bluetooth) போனாக Android OS version 4.1 அல்லது அதற்கு மேல் இருந்து அதை நீங்கள் எப்பொழுதும் இயக்கி வந்தாலே போதும் ஹேக்கர்கள் உங்கள் போனை எளிதில் Tap ’n Ghost Attack மூலமாக முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள்.

Tap ’n Ghost Attack எப்படி செய்கிறார்கள்.

Tap ’n Ghost Attack முறையை கையாளும் ஹேக்கர்கள் இரு முறைகளை பயன்படுத்தி வருவதாக ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Tag-based Adaptive Ploy (TAP)

TAP attack ஆனது ஒரு இணையத்தின் உதவியுடன் செயல்படும், இது Finger Print உபயோகம் மற்றும் NFC tag emulator உடன் ஒரு சிறிய அட்டை போன்ற கம்ப்யூட்டர் WiFi உடன் உள்ளடக்கியது.

ஒருமுறை ஹேக் செய்யப்பட வேண்டிய ஆண்ட்ராய்டு போன் இந்த emulator அருகில் வரும்பொழுது அவரின் அனுமதியின்றி Browser யை இயக்க செய்து சம்மந்தப்பட்ட malicious URL க்கு அனுமதி வழங்கி அந்த Android போனை Contoll செய்கிறது.

Ghost Touch Generator

இந்த Ghost Touch Generator முறை சற்று வித்தியாசமானது அதாவது நாம் குழந்தைகளாக இருக்கும் பொழுது எதை செய்ய கூடாது என்கிறார்களோ அதையே செய்து முடிப்போம் அப்படித்தான் இந்த முறையும் செய்கிறது.

ஹேக் செய்ய கூடிய android phone ல் malicious Wi-Fi அதாவது ஹேக் செய்ய பயன்படுத்தப்படும் Wi-Fi யை இணைக்க அனுமதி ஒன்றை கேட்கும். நாம் பொதுவாக அதை நிராகரித்து விடுவோம் ஆனால் இந்த malicious code நம் போனின் தொடு திரையை ஹேக் செய்கிறது.

இதனால் நாம் எதை தொட்டாலும் அனுமதிக்கான பட்டனை தொடுவது போன்றே செய்து அந்த ஆபத்தான Wi-Fi உடன் Phone யை இணைத்துவிடும்

இந்த ஹேக்கிங்ல் யாரெல்லாம் சிக்குவார்கள்?

  •  Android Phone 4.1 அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் .
  • எப்பொழுதும் NFC(WiFi and Bluetooth) யை இயக்குவபவர்கள்.
  • Ghost Touch Generator இயக்கப்படும் பொழுது போனின் பாதுகாப்பு செயல்முறை குறைவாக அல்லது முடக்கப்பட்டு வைத்திருப்பவர்கள்.
  • Browser ல் Malicious Table Open ஆகும் பொழுது Phone Unlock செய்து மேலும் அதை Close செய்யாமல் இருப்பவர்கள்.
  • இந்த தாக்குதலில் பாதிக்கப்படலாம்.

Disclaimer :

The Content published on this website is intended for general information and educational purposes only and is not legal advice or other professional advice.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *