இணையதள பாதுகாப்பு

போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் பலே மோசடி

போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் பலே மோசடி!!

fake lone app tamil nadu cyber crime

இந்த நவீன உலகில் திருடர்களும் நாளுக்கு நாள் நவீனமாகி வருகின்றனர். அப்படி ஒரு திருட்டு கும்பல் ஒன்று லோன் வாங்கி தருவதாக ஒரு போலியான FCL என்ற  ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை உருவாக்கி பல நபர்களை ஏமாற்றி வருகிறது.

எப்படி ஏமாற்றுகிறார்கள்?

ஹலோ நாங்க FCL கம்பெனில இருந்து பே சுரோம் சார்….. நீங்க ரொம்ப அதிஷ்டசாலி உங்களுக்கு லோன் அப்ரூவல் ஆகிருக்கு சார் என்று இனிக்க இனிக்க பெண் ஒருவர் பேசுவார்.

அதற்காக ஒரு சில தகவல்களை தேவைப்படுவதாக சொல்லி உங்கள் வங்கி மற்றும் ஆதார் தகவல்களை கேட்க தொடங்குவார் பிறகு நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அதை இமெயிலில் அனுப்ப சொல்லுவார்.

நீங்கள் பேசும்போது விவரமாக கேட்டால் அதோடு நிறுத்திக்கொள்வார் அல்லது ஐ!!! லோன் கிடைச்சிட்டுன்னு அவங்க சொல்றதுக்கெல்லாம் தலைய ஆட்டுனா Atm தகவல்களையும் கேட்பார் அப்புறம் ஈஸியா உங்கள் பணத்தை திருடி விடுவார்.

சமீபத்தில் நடந்த மோசடி..

மதுரையை சேர்ந்த குமார் (முடி திருத்துபவர் )என்பவரை தொடர்புகொண்ட மோசடி கும்பல் உங்களுக்கு 50,000 லோன் கிடைத்துள்ளது என கூறி மின்னஞ்சலில் அவரின் தகவல்களை வாங்கியுள்ளது அந்த மோசடி கும்பல்.

பின்னர் அவர் ATM எண் கேட்டால் சந்தேகம் வரும் என FCL என்ற  ஆண்ட்ராய்டு ஆப் லிங் ஒன்றை SMS ல் அனுப்பி அதில் 50,000 வரவு வைக்கபட்டது போல காட்டி.

எங்களுக்கான 4% பணத்தை போட்டால் நீங்கள் அதை பயன்படுத்திக்கொல்லாம் என சொல்லி 2,000 ரூபாய் பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்ப சொல்லி ஏமாற்றி உள்ளனர்.

அந்த ஆப் குறித்த தகவல்கள்.

cyberlites

அப்பாவி மக்களை குறிவைக்கும் இந்த மோசடி கும்பலின் ஆண்ராய்டு ஆப் யை பரிசோதித்து சைபர்லைட்ஸ்.

இந்த ஆப் கூகிள் Play store ல் மூன்று  மாதங்களுக்கு முன்னதாக வங்கி பிரிவின் கீழ் பதிவேற்றபட்டது. அதில் ஆயிரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்த நிலையில் Play store ல் இருந்து போலியான ஆப் என நீக்கியுள்ளது கூகிள்.

தற்பொழுது https://appagg.com போன்ற சட்ட விரோத ஆப்களை வைத்திருக்கும் இணையதளத்தில் வைத்துள்ளனர்.  மேலும் Media fire மற்றும் சில Cloud சேமிப்புகளில் வைத்து லிங் மூலமாக அனுப்பி வருகின்றனர்.

முதலில் நீங்கள் உங்கள் லோன் அப்ளிகேஷனை நீங்கலாக அதில் செய்ய வேண்டும் பிறகு அதை நீங்கள் நம்ப வேண்டும் என்று  அவர்கள் நிராகரித்துவிட்டு பின்னர் அனுமதிப்பார்கள்.

மேலும் இதில் லோன் பெற உங்கள் வருமான விவரங்கள் தேவையில்லை எனவும் மிகவும் எளிமையானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

appagg இணையதளத்தில் மட்டும் இதுவரை 2000 பேர் இதை நிறுவியுள்ளனர். மற்றவை கணக்கில் வராதவை.

மேலும் இது ஒரு சாதாரண படங்களை காட்டும் மிக எளிமையான செயலி ஆகும் அனைத்து சேவைகளுக்கான படங்களை மட்டுமே வைத்து ஏமாற்றி வருகின்றனர். மேலும் 15 நாட்களுக்கு முன் வரை இந்த ஆப் ல் சிறிய மாறுதல்களை செய்துள்ளனர்.

கூடுதல் விவரங்கள்:

  • ID: com.fastcreditloan.app
  • Category: Android Apps › Finance
  • Size: 14Mb
  • OS: Android 4.1 and up
  • Release Date: 
  • Content Rating: Everyone 4+
  • Google Play Rating: 3.4/5 (1,895)
  • Data Source: Google PlayGoogle Play

நீங்கள் இந்த மோசடி கும்பலில் பாதிக்கப்பட்டு இருந்தால் உங்கள் அனுபவங்களை சைபர்லைட்ஸ் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *