மோடி பெயரில் போலி UPI கணக்கு

மோடி

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் பிடியிலிருந்து தப்ப முடியாமல் ஒவ்வொரு நாளும் அவசர பிரகடனத்தை அறிவித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறன.

மேலும் கொரோனா பரவுதலினால்  ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமலும் மக்களுக்கு சிறப்பான மருத்துவ மற்றும் நிவாரணத்தை வழங்கிட முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் பெரும்பாலான நாடுகள்தன்னார்வலர்களிடம் நிதி சேகரித்து மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு செலவு செய்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதி அளிக்க பிரதமர் மோடி யுபிஐ ஐடி ஒன்றை வெளியிட்டார்.அதையும் விட்டுவைக்காத இணையதள குற்றவாளிகள் பிரதமர் மோடி அறிவித்த அதைப்போன்றே ஒரு போலியானUPI ஒன்றை உருவாக்கி அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பிரதமருக்கு சென்று கிடைக்கவேண்டிய பொது நிவாரண நிதியை மறைமுகமாக பெற வழிவகை செய்துள்ளனர்.

இந்த UPIஐடி ஆனது பிரதமர் வெளியிட்ட ஐடியை ஒட்டி இருப்பதால் பெரும்பாலானோருக்கு இதில் உள்ள பிழைகள் தெரிய வாய்ப்பில்லை.

பிரதமர் வெளியிட்டது : pmcares@sbi

போலி கணக்கு : pmcars@sbi

இந்தநிலையில் இரண்டிற்கும் மான வேற்றுமையை கண்டறிந்த ஒருவர் டெல்லி போலீஸ்,ரிசர்வ் வங்கி,நிதி அமைச்சகம் போன்றவற்றிற்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் முதலில் அந்த யூபிஐடி இணைக்கப்பட்ட கணக்கை முடக்கி பின்னர் வழக்குப்பதிவு செய்து போலி UPI உருவாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *