CSC VLE களுக்கு இலவச சைபர் செக்யுரிட்டி கோர்ஸ்.

CSC (village level entrepreneur) என அழைக்க கூடிய கிராமப்புற தொழில் முனைவோருக்கான  இணையதளம் கடந்த 31st Jan 2011 முதல் இயங்கிக் கொண்டுள்ளது.

இதில் பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைகள் VLEகளுக்கு கொடுக்கப்பட்டு இந்த இணையதளம்  மூலமாக பொதுமக்களுக்கு சென்றடைகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ்  காரணமாக இந்தியாவின் பெரும்பான்மையான பொது சேவை மையங்கள் அடைக்கப்பட்டுள்ளன மேலும் அதில் பணிபுரிந்து வந்த VLEக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

 இதனை கருத்தில் கொண்டு VLE-கள்  தங்கள் பொழுதை பயனுள்ள முறையில் கழிக்க National eGovernance நிர்வாகமானது சில தினங்களுக்கு முன்பு TEC ( Telecentre entrepreneur course) வழங்கியது.

தற்பொழுது அனைத்து VLE-களுக்கும் இலவச Cyber Security Professional Basic Online Course வழங்கியுள்ளது. முன்பு இதன் விலை ₹1,180 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்திருந்த நிலையில் தற்பொழுது இலவசமாக வழங்கப்படுகிறது. 

https://digitalseva.csc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட VLE-கள் அனைவரும் தனக்கு கொடுக்கப்பட்ட பக்கத்திலிருந்து தனது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து இந்த கோர்சினை இலவசமாக பெற முடியும்.

மேலும் இதற்காக கொடுக்கப்பட்டுள்ள Cscacademy என்ற இணையதளத்தில் தங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்ணை உள்ளீடு செய்து தங்கள் பாடங்களை வீடியோவாக பார்க்க முடியும். இணையதளத்தில் பாடங்களை வீடியோவாக பார்த்து அதற்கு அங்கேயே தேர்வும் எழுத முடியும்.

 

இலவசமாக கொடுக்கப்பட்ட கோர்ஸில்

  • Cyber Security Introduction
  • Calculations Computation Communication
  • Essentials of Cyber Security, Security Concept
  • Functioning of Internet and Network Layers
  • Basic Threats and Vulnerabilities Part -I
  • Basic Threats and Vulnerabilities Part -II
  • Basic Threats and Vulnerabilities Part – III
  • Additional Threats and Vulnerabilities
  • Exploitation: Threats and Vulnerabilities
  • New Trends in Cyber Threats and Attacks

முதலியவை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் இணையதள குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா என்ற கூற்றின் கடைசி ஊழியர்களான கிராமப்புற தொழில் முனைவோர்களுக்கு இந்த கோர்ஸ் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது பெரும்பான்மையான VLE கள்  மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த கோர்ஸ் அடிப்படை இணையதள  குற்றச் செயல்களிலிருந்து VLE கள் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் ஹேக்கர்களின் சைபர் தாக்குதலிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முடியும் என நம்புகிறார்கள். இதுவரை தமிழகத்தில் மட்டும் 800+ நபர்களுக்கு மேல்  இந்த கோர்ஸை பதிவு செய்து இலவசமாக பெற்றுள்ளனர்.

ஹேக்கர்கள் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவிலுள்ள புகைப்பட நிறுவனங்களை(Photo studios) குறிவைத்து அதன் கணினிகளை  முடக்கியது குறிப்பிடத்தக்கது.

One thought on “CSC VLE களுக்கு இலவச சைபர் செக்யுரிட்டி கோர்ஸ்.

  • March 31, 2020 at 11:25 am
    Permalink

    நான் ரிஜிஸ்டர் செய்துவிட்டேன்.நன்றி (சிலப்பதிகாரம் CSC பாபநாசம்)

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *