கொரோனாவை கையிலெடுத்த ஹேக்கர்கள்

உலகமெங்கிலும் கொரோனா அச்சுறுத்தல் மக்களை பீதி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் சில ஹேக்கர்கள் சமூகவலைத்தள பக்கத்தில் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் சில இணையதள பக்கங்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் வலம் வருகிறது, தற்போதைய நவீன உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கைபேசியும் அதில் இணையதள இணைப்பும் இருந்தால் போதும் அவ்வாறான மக்களையும் கொரோனா குறித்த அச்சத்தில் இருக்கும் மக்களையும் குறிவைத்து சில ஹேக்கர்கள் இணையதள குற்ற செயல்களை செய்து வருகின்றனர்.

 

இந்தியாவில் இமெயில்,வாட்ஸ்அப், எஸ்எம்எஸ், பேஸ்புக் வாயிலாக பகிரப்பட்டு வரும் செய்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் உங்களுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலவசமாக 1000 ஜிபி இன்டர்நெட் இலவசமாக வழங்கப்படுவதாகவும் வைரஸ் குறித்த அப்டேட்களை தொடர்ந்து தருவதாகவும் ஒரு இணையதள லிங்க் உடன் செய்தி பகிரப்படுகிறது.

 

 அந்த லிங்கை திறந்தவுடன் அதில் புரோகிராம் செய்யப்பட்ட குறிப்புகள் தனது வேலையை செய்ய ஆரம்பிக்கிறது அடுத்ததாக அதை சில குழுக்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்தால் தான் உங்களுக்கு இந்த ஆபர் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டுகிறது இதையும் நம்பி 200 பேர்களுக்கு மேல் இருக்கக்கூடிய குழுவில் கூட பகிர்கின்றனர். ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த பல குழுக்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் இதே நிலை தொடர்ந்து உலகமெங்கிலும் கொரோனா வைரசை விட அதிக வேகத்தில் இந்த ஆபத்தை விளைவிக்கக்கூடிய இணையதளங்கள் பரவுகின்றது.

 

 இந்த இணையதள லிங்க் களை திறப்பதன் மூலம் உங்கள் கைபேசியில் உள்ள

 

  • தனிநபர் விவரங்கள்
  • ஏடிஎம் கார்டு விவரங்கள்
  • உங்கள் சோசியல் பக்கங்களில் உள்ள பாஸ்வேர்டுகள்
  • உங்கள் கைபேசியில் உள்ள தொடர்பு எண்கள்

முதலிய பலவற்றை ஹேக்கர்கள் உடன் பகிர நேரிடும். மேலும் சம்பந்தப்பட்ட இணையதளங்கள் அனைத்தும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது இதில் உள்ள சில குறிப்புகள் நீங்கள் அந்த லிங்கை திறந்தவுடன் குறிப்பிட்ட நேரத்தில் சில Adware  கள் கைபேசியில் உள்ள பிரௌசரில் உள்ள குக்கிஸ்-ல் அமர்ந்துகொள்கிறது. இதனால் நீங்கள் தேவையற்ற விளம்பரங்களை பெறுவதுடன் இதேபோல் ஆபத்தை விளைவிக்கக்கூடிய இணையதளங்களுக்கு நீங்கள் தொடர்ந்து செல்ல நேரிடும்.

 

இதனால் இது போன்று பகிரப்படும் எஸ்எம்எஸ்களை புறக்கணிப்பதுடன் சம்பந்தப்பட்ட இணையதளத்தை இந்தியாவில் சைபர் கிரைம் பொலிசாருக்கு தெரியப்படுத்துவதும் இதுபோன்ற இணையதள பக்கங்களை திறக்காமல் இருப்பது நம் இணையதள  தனிநபர் சுதந்திரத்தை மேலும் பாதுகாப்பாகும்.

 

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *