கொரோனா ஊரடங்கு: “ஆபாச படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு”-பட்டியல் தயார்.

மனித மூளையானது கேட்பதை விட பார்த்தவைகளை செய்ய தூண்டுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. இப்படித்தான் ஆபாச படங்கள் பார்க்கும் பெரும்பாலோனோர் குழந்தைகள் மீதான வல்லுறவு சம்மந்தப்பட்ட படங்களை பார்த்து அதேபோன்று நடந்து கொள்கின்றனர்.

இதனால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதுபோன்று சிறுமிகள் மற்றும் வல்லுறவு சம்மந்தப்பட்ட வீடியோக்களை பார்ப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அதற்கான பட்டியலை தயார்செய்து வருகிறர்கள் தமிழக சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆபாச படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் அதற்கான பட்டியல் தயார் நிலையில் உள்ளதாகவும் , விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளதாக தினத்தந்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தினத்தந்தி நாளிதழ் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டில் அடைபட்டு கிடப்பவர்கள் தங்களது செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது நூறு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதிலும் சென்னை நகரில் இது அதிகமாக உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் பட்டியல் வெளியிடப்படுவதுடன் மிக விரைவில் அவர்கள்மீது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *