voomo ஆன்லைன் மோசடி? | Cyberlites.com

Voomo மோசடியா?

Voomo என்ற ஆன்லைன் நிறுவனமானது  bitcoin க்கு  அடுத்தபடியான Ethereum என்ற உலகில் இரண்டாவது பிரபலமான cryptocurrency யை கொண்டு செயல்படுவதாக சொல்லப்படுகிறது.

 

இந்த இணையதளம்  https://voomo.io/ மற்றும் https://app.voomo.io/என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இந்த இணையதளத்தின் உண்மைத்தன்மையை சைபர் லைட்ஸ் இணைய பரிசோதனை குழு ஆய்வு செய்தது. அதில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன அந்த தகவல்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

 

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் இந்த இணையதளத்திற்கு சொந்தமான எந்த நிறுவனமும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை. நிறுவனம் இல்லாத தனி நபர் வழிகாட்டுதலின் படியே Voomo என்ற இணைய தளம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

உரிமையாளரின் பெயர் மறைக்கப்பட்டு இருக்கிறது, மேலும் இந்த இணையதளம் 19.05.2020 அன்று துவங்கப்பட்டு இருந்தாலும் 17.06.2020 அன்று தான் செயல்பாட்டிற்கு வந்துள்ளது . வெறும் ஒரு வருடத்திற்கு மட்டும் இந்த முகவரியை வாங்கியுள்ளனர் அதாவது 18.07.2021 அன்று இந்த இணையதளம் காலாவதியாகிவிடும்.

இந்த இணையதளமானது மல்டி லெவல் மார்க்கெட்டிங்(MLM) என்ற தொழில் முறையை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகிறது மக்களுக்கு புரியாத குறிப்பாக இந்திய மக்களுக்கு சற்றும் அறிமுகம் இல்லாத ஒரு ஆன்லைன் பரிவர்த்தனை பணத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த பரிவர்த்தனைகள் உண்மையில்  Ethereum cryptocurrency பரிவர்த்தனைகளாக நடைபெறுவதில்லை.

முழுக்க முழுக்க வங்கி பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவே பயனாளர்களின் பணம் பெறப்படுகிறது. இதற்கான காரணமாக அவர்கள் கூறுவது உங்களிடம் Ethereum இல்லை என்பதாலேயே நாங்கள் இப்படி வங்கியில்  அனுப்பும்படி கேட்கிறோம் என்பார்கள்.

 

இதில் நீங்கள் இணைய 3,000 முதல் 10,000 வரை அவர்களுக்கு வங்கியில் செலுத்த வேண்டும் பின்னர் இதில் ஒரு கணக்கு துவங்க பட்டதும் நீங்கள் பலரையும் இதில் இணைக்கலாம்.

ஒவ்வொருவரை இணைக்கும் பொழுதும் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உங்களிடம் பணம் வசூல் செய்வார்கள். அதற்கு கமிஷனாக உங்களுக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே கிடைக்கும். அதுவும் போலியான வங்கிக்கணக்கு வாயிலாக.

 

ஒருவரிடம் இருந்து 3,000 பணம் வாங்கி தாருங்கள் நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன் மேலும் அவர் மற்றொருவரிடம் இருந்து மேலும் 3000 வாங்கி கொடுத்தால் அவருக்கு 500 ரூபாயும் உங்களுக்கு 100 ரூபாயும் தருகிறேன் என்றால் அதை நீங்கள் ஒரு முழுநேர பணியாக செய்வீர்களா?

ஆனால் வேடிக்கை என்னெவென்றால் இதுவரை 5000 பேருக்கு மேல் இதை செய்து கொண்டிருக்கின்றனர் . அந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள்ளாக 15,000,000+ ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது அந்த இணையதளம்.

அந்த இணையதளத்தை உருவாக்க அவர்கள் வெறும் 20,000 கூட செலவு செய்திருக்க மாட்டார்கள்.

ஊரடங்கை மையமாக கொண்டு வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்திகளை முன்வைத்து செயல்படும் இதுபோன்ற இணையதளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய்.

இதுபோன்ற இணையதளங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.

மேலும் போலியான இணையதளம் என சந்தேகித்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள்.

இதுபோன்று ஏதாவது இணையதளங்களின் மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக எங்கள் இணையதள பரிசிலனை குழுவிற்கு  check@cyberlites.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவியுங்கள்.

Send this to a friend