ஊரடங்கு காரணமாக அதிக தூரம் நடந்ததால் சிறுவர்களின் கால்கள் இப்படி ஆனதா?

பகிரப்படும் செய்தி

வடமாநில சிறுவர்கள் சிலர் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப அதிக தூரம் நடந்ததால் அவர்களின் கால்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு காலில் உள்ள தோல் வெளிவந்துள்ளது.

உண்மைத்தன்மை

Fake(பொய்)

விளக்கம்

 

வடமாநில சிறுவர்கள் சிலர் ஊரடங்கு காரணமாக அதிக தூரம் நடந்ததால் அவர்களின் கால்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட கால்களிலிருந்து தோல் வெடித்து காணப்படுவது போன்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து சைபர்லைட்ஸ் இன் உண்மைத்தன்மை கண்டறியும் குழுவிற்கு வந்த தகவலையடுத்து கிடைக்கப்பெற்ற இமேஜை ரிவர்ஸ்சர்ச் செய்யப்பட்ட பொழுது கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே தி லண்டன் போஸ்ட் (படிக்க) என்ற இணையதளத்தில் அந்தப் படம் வெளிவந்துள்ளது.

அதில் பாகிஸ்தானின் பணமதிப்பிழப்பு காரணமாக ஏற்பட்ட பணவீக்கத்தை சமாளிக்க முடியாமல் அங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் மிக மோசமான நீரை குடித்து வருவதால் அவர்களுக்கு பல்வேறு பிரட்சனைகள் ஏற்பட்டு வருவதாகவும்.

விலங்குகளும் மனிதர்களும் ஒரே இடத்தில் தண்ணீர் பருகும் அவலம் உள்ளதாகவும் அங்கு உள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னார்வலர்கள் முன்வரவேண்டும் எனவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

 இதனை 17,000ற்கும் அதிகமானோர் படித்துள்ளனர்.  

 

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படத்தை பயன்படுத்தி இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அதிக தூரம் நடந்த சிறுவர்களின் கால்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர் இதனை தெரியாமல் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 

Send this to a friend