கொரோனா வைரஸை டிராக் செய்யும் Aarogya setu ஆப்

MyGov என்ற செயலி மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை அரசு, மக்களுக்கு வழங்கிய நிலையில், தற்போது கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான செயலியை உருவாக்கியுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ios சாதனங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 ஜிபிஎஸ் மற்றும் ப்ளுடுத்  ஆன் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்தின் அருகே கொரோனா பாதித்தவர் பகுதி இருந்தால் சுட்டிக்காட்டும். மேலும், அருகில் உள்ள கொரோனா பாதிப்பு இடத்தின் தூரத்தையும் செயலி காட்டும்.

 

இது எப்படி சாத்தியமாகிறது என்றால் நாம் நமது கைபேசியில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் பொழுது இதில் இயங்கிக்கொண்டிருக்கும் ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் சாதனங்கள் நீங்கள் செல்லும் இடத்தையும் அருகிலிருக்கும் நபரையும் கணக்கிட்டுக் கொண்டே இருக்கும்.aarogya-setu NEW APP

 ஒருவேளை ஒருவனா பாதிப்பு தொற்று இருக்கும் இடத்தில் ஒருவர் கடந்து இருக்கும் பட்சத்தில் அவர் உங்களிடம் வரும்பொழுது அவரது கைபேசியில் உள்ள தரவுகளின் அடிப்படையில் உங்களுக்கு எச்சரிக்கை சமிக்கைகளை அனுப்பும்.aarogya-setu

அதேபோன்று நீங்கள் கொரோனா உள்ள இடத்திற்கு சென்று இருந்தால் உங்களுக்கான அறிவுரைகளை வழங்குவதுடன் அருகில் இருப்பவரையும் எச்சரிக்கை செய்யும்.மேலும் அரசு  உங்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க முடியும்.

 

 இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் கைப்பேசி எண் வாயிலாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Send this to a friend