மோசமான டிஜிட்டல் பணியிடமாக Zomato தேர்வு!

டிஜிட்டலின் மூலம் இயங்கக்கூடிய அல்லது பெருமளவு டிஜிட்டளைச் சார்ந்து இயங்கும்  பணிகளில், இந்தியாவில் மிக மோசமான டிஜிட்டல் பணியிடமாக Zomato நிறுவனம் தேர்வு  செய்யப்பட்டுள்ளது.

பேர்வொர்க் இந்தியா என்கிற அமைப்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்கும் பணியிடங்களைப் பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொண்டு, தற்பொழுது அதற்கான அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த மற்றும்  மோசமானப் பணியிடங்கள் என்ற தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் கடைசி இடத்தை Zomato நிறுவனம் பிடித்துள்ளது. மேலும், Swiggy மற்றும் Uber ஆகிய நிறுவனங்களும் பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை ஆனது, நிறுவனங்களின் அனைத்து செயல்பாடுகளையும் பொருத்து அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இடம் யாருக்கு?

இந்த ஆய்வில் Urban முதல் இடத்தையும், E-Cart  இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

பொறுப்பு தன்னுடையது!

Zomato -வின் முழு பொறுப்பும்  தன்னுடையது என்று ஏற்றுக்கொண்ட அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல், அடுத்த வருடம் இந்தச் சூழலை மேம்படுத்த சிறந்த முயற்சியைத் தருவோம் என்று கூறியுள்ளார்.

இன்னும் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் உள்ளன என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் திருத்திக் கொள்ள இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை!

இதில் மிகக் குறைந்த அளவு புள்ளிகளைப் பெற்றுள்ளதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அடுத்த வருடம் இந்த மதிப்பீட்டில் சிறப்பான இடம் பெற எல்லா வித முயற்சிகளையும் செய்வோம் என்று Zomato – நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் ட்வீட் செய்துள்ளார்.

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *