Instagram மூலம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! 17 வயது சிறுவனைக் கைது செய்தது காவல்துறை!

Disclaimer :The Content published on this website is intended for general information and educational purposes only and is not legal advice or other professional advice.

டெல்லியில் 17 வயதுடைய சிறுவன் மீது, 20 வயது இளம்பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக காவல்துறையிடம் புகார் செய்தார்.

அவர் கொடுத்த புகாரில் Instagram  வழியாக அவருக்கு தவறான, பாலியல் ரீதியிலான புகைப்படங்களை ஒரு நபர் அனுப்புவதாகவும், மேலும் அவர் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடக் கூறி வற்புறுத்துவதாகவும் கூறினார்.

இதை கவனத்தில் எடுத்த காவல்துறையினர் வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. விசாரணையில்  செய்திகளை அனுப்பிய நபர் Spoofing இ-மெயில், அதாவது ஒரு போலியான  இ-மெயில் முகவரியினைக் கொண்டு, இளம்பெண்ணுக்கு செய்தி அனுப்பியதையும் கண்டறிந்தனர்.

மேலும் இந்த இ-மெயில் முகவரியினை VPN உதவியைக் கொண்டு சிறுவன் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

பின்னர் சைபர் கிரைம் உதவியுடன் இந்த இ-மெயில் முகவரி பயன்படுத்தப்பட்ட சாதனத்தின்  IP முகவரியைக் கண்டறிந்த சைபர் குழுவினர் அந்த சிறுவனைக் கைது செய்தனர்.

கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்,  இந்திய தண்டனைச் சட்டம் 354(D) (பின்தொடர்தல்), 506 (குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை) மற்றும் 509 (ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட சொல், சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் அந்த சிறுவன் பயன்படுத்தி வந்த மொபைலையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.

Disclaimer :The Content published on this website is intended for general information and educational purposes only and is not legal advice or other professional advice.

 

மற்றவர்களுடன் பகிருங்கள்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *