கூடங்குளம் அணுஉலையின் கணிணிகள் ஃஹேக் செய்யப்பட்டதா?

kudankulam nuclear power plant hacked

 நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருக்கின்ற திரு சசிதரூர் அவர்கள் கூடங்குளம் அணு உலையின்  கணினிகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாகவும், அது குறித்து அரசும் நிர்வாகமும் விரிவான அறிக்கை வேண்டும் எனவும் அவர்  tweet செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

This seems very serious. If a hostile power is able to conduct a cyber attack on our nuclear facilities, the implications for India’s national security are unimaginable. The Government owes us an explanation. https://t.co/5NokFcQFWs

— Shashi Tharoor (@ShashiTharoor) October 29, 2019

இதற்கு பதிலளித்த கூடங்குளம் அணு உலை நிர்வாகம் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு உலை மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள எந்த எந்த அணு உலைகளின் கணினிகளும் இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் வேறு எந்த இடத்தில் இருந்தும் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பாக உள்ளதெனவும், கூடங்குளம் அணு உலையின்  கணினிகள்முடக்கப்பட்டுள்ளது எனசமூக ஊடகங்களிலும் ,பத்திரிகைகளிலும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.

kudankulam nuclear power plant hacked
கூடங்குளம் அணுவுலையின் அறிவிப்பு

ஏற்கனவே இந்த பகுதி மக்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியும் அணு உலை பூங்கா அமைப்பதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகின்றனர்.

மேலும் முன்னதாக அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைகள் தரமற்ற பொருட்களால் அமைக்கப்பட்டுள்ளது என்று  குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த அணு உலையில் இருக்கும் கணினிகள் முடக்கப்பட்டு அதிலிருந்து தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது என்று வந்திருக்கும் செய்தி அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் அமைய பட்டதாக சொல்லப்பட்ட இந்த அணு உலைகளின் தகவல்களை கூட இந்த அரசுகளால் பாதுகாக்க முடியாது என்றால் நாளை ஏதாவது ஆபத்து என்றால் அந்த பகுதி மக்களை எவ்வாறு இந்த அரசு காப்பாற்றும் என்கிற சந்தேகமும் அங்கிருப்பவர்கள் இடையே காணமுடிகிறது.

வைரசு கூடங்குளத்தில் இருந்து திருடியதாக சொல்லப்படும் தகவல்கள்‌.

 • இணைய நெறிமுறை எண் (IP address of hacked PC)
 • ஊடக அணுகுக் கட்டுப்பாடு எண் (MAC ID)
 • இயங்குதள நிறுவல் தகவல் (OS install info)
 • உலாவி வரலாறு (browser history)
 • compspec, ipconfig, netstat info /6
மற்றவர்களுடன் பகிருங்கள்
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *