ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நடந்த விபரீதம்!

ஆன்லைன் ரம்மி விபரீதம் இன்று நாம் அனைவரின் வாழ்விலும் இணையம் என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. அந்த இணையத்தின் மூலம் பல நன்மைகள் கிடைத்தாலும் அதே அளவு தீமைகளையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. பலரது ஆசையாக இருப்பது எளிமையாக பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதே ஆகும். அதன் மூலமாகவே இந்த உலகிற்கு அறிமுகமானது ஆன்லைனில் உருவாகிய ரம்மி போன்ற பல சூதாட்ட விளையாட்டுக்கள். இந்த விளையாட்டின் மூலம் வீட்டிலிருந்தபடியே விளையாடி பணம் ஈட்டலாம் என்பதே இதன் நோக்கமாகும்.

online rummy game youngster suicide

இதில் பணத்தை முதலீடு செய்து வெற்றி பெற்றால் ஒரு மடங்கை ஐந்து மடங்கு லாபம் ஈட்டலாம் என்பதே இந்த விளையாட்டின் சூதாகும். ஆரம்பத்திலேயே இந்த ஆன்லைன் ரம்மிக்கு வரவேற்பு அதிகமாகி மக்களிடையே பரவத் தொடங்கியது. ஆனால் தற்போது இந்த விளையாட்டு மக்களின் பணத்தை பறிகொடுத்து, அவர்களை மன அழுத்தத்திற்குள்ளாகி உயிரை பறிகொடுக்கும் விளையாட்டுக்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதனால் பணவிரயம் செய்த பலரை அடிமையாக்கி அவர்களை தற்கொலையில் தள்ளி விட்டிருக்கின்றது இந்த ரம்மி.

இதில் விளையாடி பணத்தை இழக்கின்றபொழுது,  ஏற்படும் மன அழுத்ததத்தால் மீண்டும் மீண்டும் விளையாட வைக்கின்றது. இதனால் பலர் தன் வாழ்வாதாரத்தை இழந்து பணத்தை விரையம் செய்து கடைசியில் உயிரை விடுகின்றனர்.

இவ்வாறாகவே அரங்கேறியது புதுவையை சேர்ந்த விஜயகுமாரின் மரணம். புதுச்சேரி கோர்காடு கிராமத்தைச் சார்ந்த விஜயகுமார் என்பவர் Sim கார்டுகளை விற்கும் பணியில் இருந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரியாக ஒரு வருடத்திற்கு  முன்பாக விஜயகுமாருக்கு அறிமுகம் ஆகியுள்ளது. அத பின்னர் ரம்மி விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகியுள்ளார். இதில் அடிமையான விஜயகுமார் பணத்தை அதிகமாக விளையாடி ரம்மியில் செலவிட்டுள்ளார்.பிறகு அவரிடமிருந்த பணத்தையெல்லாம் செலவிட்ட பின் கடன் வாங்கியும் ரம்மி விளையாட்டை அளவுக்கு அதிகமாக விளையாண்டு வந்துள்ளார்.

இதனால் அவருக்கு 30 ரூபாய் லட்சம் வரை கடன் சேர்ந்துள்ளது. அந்த விளையாட்டை விடுமாறு உறவினர் கூறியபோது அவரை தடுத்தாள்,  தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறுமளவிற்கு அவர் அடிமையாகி இருந்துள்ளார் இந்த ரம்மி விளையாட்டிற்கு. பெரும் கடன் சுமையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான விஜயகுமார் தனது Whatsapp Status- ல் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்யுங்கள் என Status வைத்துவிட்டு, குரல் பதிவை ஒன்றை தன் மனைவிக்கு அனுப்பி வைத்துவிட்டு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் விஜயகுமார். சூதாட்ட மோகம் விஜயகுமாரின் வாழ்க்கையை உயிரை சூறையாடியது.

Send this to a friend