Note Pad ல் I LOVE YOU வைரஸ் உருவாக்கி நண்பர்களுக்கு பகிர்ந்தால் என்ன நடக்கும்?
I LOVE YOU வைரஸ் என்றால் என்ன?
I LOVE YOU எனும் வைரஸ் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி இணையதள இணைப்பை கொண்ட பெருன்பாலான கணினிகளை முடக்கிய ஒரு தன்னிச்சையாக செயல்படக்கூடிய வைரஸ் ஆகும்.
இது தோராயமாக சில தினங்களில் 45 மில்லியன் கணினிகளை முடக்கியது. இதன் வடு கணினி பயன்பாட்டாளர்கள் மத்தியில் இன்றளவும் ஆறாமல் உள்ளது.
I LOVE YOU வைரஸ் போன்ற பாதுகாப்பான போலி வைரசை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு நீங்கள் புரோகிராமராகவோ அல்லது ஹேக்கர்களாகவோ இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. உங்களிடம் ஒரு சாதாரண விண்டோஸ் இயங்குதளம் கொண்ட சாதாரண கணினி இருந்தால் போதுமானது.
முதலில் உங்கள் கணினியில் உள்ள Note Pad ஐ திறந்து கொள்ளுங்கள்.

பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள Script களை படத்தில் உள்ளது போல Copy Paste செய்யுங்கள்.

@echo off
color 57
echo Hey, do you love me (only answer in yes or no)
set /p love=
if %love%==yes goto love
if %love%==no goto hate
:love
echo I love you too…
echo Meet you soon 🙂
pause
exit
:hate
echo But I love you….hehehehehe
echo You are hacked…
echo Your PC will crash in 10 seconds
timeout 10
shutdown -s -t 100
பிறகு இந்த Notepade ஐ i love you .bat அல்லது உங்களுக்கு பிடித்த பெயருடன் கடைசியில் .bat என்பதை சேர்த்து சேமித்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் ஆபத்தை விளைவிக்காத ஒரு போலியான i love you வைரஸ் தயார். இதனை ஒரு Pen drive ல் copy செய்து அல்லது உங்கள் நண்பருக்கு அனுப்பி அவரை திறக்க சொல்லுங்கள், அவர் அதை திறந்ததும் அவர் கணினி ஹேக் செய்யப்பட்டது போல உணருவார் மேலும் i love you வைரஸ் பற்றிய விழிப்புணர்வாகவும் இருக்கும்.
