275 மில்லியன் இந்தியர்களின் விவரங்கள் விற்பனைக்கு

இந்தியர்களின் தனி விவரங்கள் விற்பனைக்கு

சமீபத்தில் security researcher Bob Diachenko என்பவர் இந்தியர்களின் தனிநபர் விவரங்கள் பற்றிய ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதன்படி 275 மில்லியன் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை http://dataservice.in/job-seekers/ என்ற இணையதளம் ஒன்று  விற்பனை செய்து வருகிறது என்று தனது Twitter பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்திய விவரங்களை விற்பனை செய்யும் இணையதளம்.

275,265,298 இந்தியர்களின் விவரங்கள் சில ஆயிரம் ரூபாய்க்கு.

People

அவர் அந்த தகவலின் படி 275,265,298  இந்தியர்களின் ..

275,265,298
பெயர்,முகவரி,இமெயில்,போன் நம்பர், அவர்கள் படித்த விவரங்கள்,வேலை பார்த்த விவரங்கள், பாலினம், தற்பொழுது வாங்கும் சம்பளம் உட்பட

அனைத்து விவரங்களும் இந்திய மதிப்பில் சில ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளன என்று குறிப்பிட்டு இருகிறார்.

INDIAN DATA LEAK

இந்த பெரும் தகவல் திருட்டை செய்தது ‘Unistellar’

இந்த இந்தியர்களின் தகவல்கள்  முதல் முறையாக பதிவேற்றப்பட்டது April 23, 2019 என்றும்,May 1, 2019 வரையிலும் அப்டேட்கள் இருந்ததாகவும் கூறுகிறார்.

இதை கண்டு பிடித்ததும் Bob Diachenko உடனடியாக Indian Cert Team -ற்கு புகார் தகவல் ஒன்றையும் அனுப்பியுள்ளார். மேலும் ஹேக்கர் குழுமமான ‘Unistellar’ பற்றிய தகவல்கள் சிலவற்றையும் வழங்கியுள்ளார்.

இன்னும் தொடர்கிறது dataservice இணைய தளம்…

database-exposed-over-275-million-records-of-indian-citizens-tamil

இந்தியர்களின் தனித்தகவல்களை இந்த dataservice.in தளம் Data service என குறிப்பிட்டு விற்பனை செய்து வருகிறது. அதுவும் இந்திய வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த சொல்லி அனுப்பி வைக்கிறது.

ஒரு சினிமா படத்தை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களும் பாலியல் இணைய தளங்களும்  புதிதாக தொடங்கிய 8 மணி நேரத்திற்குள்ளாக இந்திய அரசால்  முடக்கப்படும்   பொழுது 275,265,298 இந்தியர்களின் விவரங்கள் சில ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் இந்த இணையதளம் சில மாதங்களை கடந்தும்  இன்னும் முடக்கப்படாதது வேதனையளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *