Tamilrockers இணையதளம் மூடப்படுகின்றதா? மூடப்படுவதற்கான காரணங்கள் என்ன?

 

                       tamilrockers closed 

இணைய உலகிற்கு பைபை சொன்னது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமா தெரியாதவர்களுக்கு கூட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பரிச்சயமானது. கிராமங்களில் அதிவேக இணையதள சேவை கிடைத்ததில் இருந்து தமிழ் ராக்கர்ஸ் அதிக அளவில் பிரபலமானது.

  தான் சட்டவிரோதமாக தமிழ் படங்களை மிகத் துல்லியமாக தொடர்ந்து வெளியிட்டு வந்த இணையதளம் நாளடைவில் சர்வதேச படங்களையும் மிகச்சாதாரணமாக வெளியிடத் தொடங்கியது.

தமிழ்நாட்டில் மட்டும் பேசப்பட்டு வந்த தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் உலக அளவில் பிரபலமானது. தொடர்ந்து இந்திய அரசால் முடக்கப்பட்ட வந்தாலும் வெவ்வேறு பெயர்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்தியாவிலும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது.

பின்னொரு நாளில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் தொடர்ந்து இந்தியாவில் முடக்கப்பட்டதால் அதனை அன்லாக்(Unlock) செய்யும் விதமாக  விபின் ஒன்றை தமிழ்ராக்கர்ஸ் இணையதளமே வெளியிட்டது. இதனால் இந்தியாவில் முடக்கப்பட்டு இருந்தாலும் இந்தியர்களால் தொடர்ச்சியாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை காணமுடிந்தது. தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் படங்கள் மட்டுமல்லாது விலை உயர்ந்த சாஃப்ட்வேர்கள் மற்றும் கருவிகளை இலவசமாக டவுன்லோட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டது அதன் மீதான அதிகப்படியான பார்வையை உருவாக்கியது.

மேலும் வாடிக்கையாளர்கள் இலவச கணக்கு ஒன்றை துவங்கி தமிழ்ராக்கர்ஸ்-க்கு தொடர்ச்சியாக புதுப் படங்களையும், செய்திகளையும் அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்தது இந்த இணையதளம். ஆனால், நாளடைவில் அதுவே அவர்களுக்கு பிரச்சினையாக அமைந்ததால் மிகவும் நம்பிக்கையான அவர்களது குழுவில் உள்ள வர்களுக்கு மட்டும் பயனாளர் உள்நுழைவு அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் முகப்பு பக்கத்திலேயே நம்மால் காணமுடியும்.

இந்தியாவின் பிரபல ஹேக்கர்கள் ஆக சொல்லப்படும் பலராலும் கூட இதுவரை தமிழ்ராக்கர்ஸ்-ன் அட்மினை இந்த உலகத்திற்கு வெளிக் கொண்டுவர முடியவில்லை. தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் என்பது புதுப்படங்கள் வெளியாகும்போதே தன்னுடைய இணையப் பக்கத்திலும் அந்த திரைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கும். சில நேரங்களில் வெளியீட்டிற்கு முன்பு கூட வெளியாக வேண்டிய புதுப்படங்களை வெளியிட்டு மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வந்த ஒரு இணையதளம் ஆகும்.

இந்த இணையதளம் சினிமாத்துறையில் உள்ள அனைத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சார்ந்த அனைத்து தொழிலாளர்களையும் பாதிப்பிற்குள்ளாக்கி வந்தது. தமிழ்த்திரை உலகின் மிகப்பெரிய சவாலாக இருந்து வந்த தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் சமீபத்தில் தங்களுடைய இணையத்தை மூடப்போவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

எதனால் இந்த முடக்கம்?

ஒருவருடைய படைப்பை அடுத்தவர்கள் திருடக்கூடாது என்ற காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் சினிமா துறையில் அதிக அளவிலான சட்டங்கள் தமிழ்ராக்கர்ஸ் மீது எழுப்பப்பட்டன. தொடர்ந்து புதுப்படங்கள் வெளிவந்த சில மணி நேரத்தில் இணையப் பக்கத்தில் வெளியிட்டதால் தொடர்ந்து தமிழ்ராக்கர்ஸ் மீதான அதிகபடியான காப்புரிமை சட்டங்கள் அதிக அளவில் குற்றம் சாட்டப்பட்டது.

திருட்டுத் தனமாக புதுப்படங்களை வெளியிடுவதாகவும், காப்புரிமை சட்டங்களை மீறி செயல்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தமிழ் மட்டும் அல்லது மற்ற மொழி படங்களையும் தமிழ்ரக்கர்ஸ் இணையதளம் விட்டு வைக்கவில்லை .தொடர்ந்து தன் மீதான குற்றங்களை அதிகரித்துக் கொண்டே சென்றது இந்த பைரசி இணையதளம். தமிழ்ராக்கர்ஸ் இணையத்தை பல முறை முடக்கியும் மீண்டும் மீண்டும் முளைத்து வந்து கொண்டே இருந்தது இந்த இணையதளம்.

நிரந்தரமாக மூடப்படுகின்றதா தமிழ்ராக்கர்ஸ்?

கடந்து 10 ஆண்டுகளாக திரை உலகின் மிகப்பெரிய சவாலாக இருந்து வந்த தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் சமீபத்தில் தங்களுடைய இணையத்தை மூடப்போவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொடர்ந்து வெளியிட்டு வரும் ஆன்லைன் Streaming படங்கள் தமிழ்ராக்கர்ஸ் முடக்கத்தால் அதிக பார்வையாளர்களை பெறும். இது நிரந்தரமான முடக்கமா? அல்லது தற்காலிகமானதா? என்பது அரசு தொடர்ந்து இது போன்ற இணையதளங்களின் செயல்பாட்டினை எந்த அளவு கண்காணிக்கும்? தடை செய்யும் என்பதை பொறுத்தே அமையும்.

 

Send this to a friend