இணையதள பாதுகாப்பு

TikTok App Blocked In India By Google

இனி கூகிளில் தேடினாலும் TikTok செயலி கிடைக்காது

டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து இந்திய கூகுள் நிறுவனம் டிக் டாக் செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கியது.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘டிக்-டாக்’ என்னும் செயலி சீனாவை தலைமையிடமாக கொண்டது.

இந்த டிக்டாக் செயலியைஇளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும்  இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

பல உயிர்களை கொன்ற டிக்டாக்

ரயில் தண்டவாளங்கள். நடுரோடு , செல்போன் கோபுரங்கள், காவல் நிலையங்கள் விமான நிலையங்கள் இராணுவ எல்லை, ஏன் கழிவறை உட்பட அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த டிக்டாக் செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆபாச தளமாக மாறிவரும் டிக்டாக் செயலி தற்போது பல்வேறு வகையிலும் தீமையை தருகிறது  இதனால் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

“டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வந்த சீனா

டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், “டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது.

கோர்ட்டு உத்தரவுக்கு பின்பு, பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு தடை  இருப்பதால், தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

ஆப்பிள் , கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி எச்சரித்தனர்

தடையை விலக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதாடிய டிக்டாக் தரப்பு வாதத்தை ஏற்காத நீதிபதிகள்

வழக்கு குறித்து பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே “டிக்-டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டு,  விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்தியாவிலும் டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியாது.

இதுகுறித்து ஆப்பிள் , கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி எச்சரித்திருந்தனர். இதையடுத்து முதல்கட்டமாக  கூகுள் நிறுவனம் இந்தியாவில் டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியாதபடி ப்ளேஸ்டோரில் இருந்து  நீக்கியிருக்கிறது.

இதனால் டிக்டாக் செயலியை புதிதாக யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாது மேலும்  பயன்படுத்தி வருபவர்கள் அப்டேட் செய்ய முடியாமல் விரைவில் அதை விட்டு வெளிவர நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *