Whatsapp Pink என்ற வடிவில் புதிய வைரஸ்!
Whatsapp நம் அனைவருக்கும் தெரியும்? அதென்ன Whatsapp Pink? Whatsapp Pink என்பது உண்மையான் Whatsapp செயலியின் மறு பதிப்பாக இருக்ககூடும் என்று தவறாக என்ன வேண்டாம்!

இது Whatsapp வடிவத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரு வைரஸ் ஆகும். இதைப்பற்றி இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சியாளர் ராஜ்ஷேகர் ராஜாஹரியா இது குறித்து எச்சரித்ததை அடுத்து, ‘வாட்ஸ்அப் பிங்க்’ தற்பொழுது அதனுடைய ஆபத்தை புரிய வைக்கும் செய்தித் தளங்களுக்குள் சிக்கியுள்ளது.
இந்த Whatsapp Pink செயலியின் பதிவிறக்க URL-ஆனது பயனர்கள் மற்றும் இணையப் பயன்பாட்டாளர்கள் உதவியுடன் பரவி, பயனர்களை அடைந்து பதிவிறக்கச் செய்கின்றது. இந்த URL-ஐ கிளிக் செய்து பதிவிறக்கியவுடன், அது தன்னுடன் இணைக்கப்பட்ட மால்வேர்களையும் சேர்த்து இன்ஸ்டால் செய்கின்றது.
இதன் லோகோ Whatsapp செயலியை ஒத்து இருந்தாலும் நிறத்தில் மாறுபட்டு இருகின்றது. மேலும் இன்ஸ்டால் செய்யப்பட்ட சில வினாடிகளில் அந்த ஐகானை கிளிக் செய்தவுடன், இந்த செயலி மறைந்து விடுகின்றது. இதன் மூலம் மால்வேரை மறைத்து பின்புலத்தில் இயங்க வைக்கின்றது. பின்னர் சாதனத்தில் உள்ள விவரங்களை அறிய ஆரம்பிக்கின்றது.

Automatically hide the app
மறைந்து போனாலும் நாம் நமது சாதனத்தின் மற்ற செயலியான Whatsapp, Telegram, Signal போன்றவற்றிற்கு நாம் Message செய்தவுடன் மறைந்து போன இந்த Whatsapp Pink செயலி மீண்டும் அதே செயலியை பதிவிறக்கக் கோரி ஒரு spam மெசேஜ்-ஐ அனுப்புகின்றது. இதன் மூலம் நாம் இந்த மால்வேரை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
Signal reply
Whatsapp reply
நமது சாதனத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஒரு மென்பொருள் உடனடியாக மறைந்து பின்னர் அது வேற செயலியின் மூலம் மீண்டும் தன்னை பதிவிறக்கக் கோரி ஒரு செய்தியை நமக்கு அனுப்புகின்றது. இது தானாக பரவும் தன்மையும் கொண்டு செயல்பட்டு பயனர்களின் Data-வை திருட முயற்சி செய்வதால்,நீங்கள் இந்த செயலியை இன்ஸ்டால் செய்திருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்!




