Whatsapp-ல இதெல்லாம் பண்ணாதீங்க!

     இன்னைக்கு நம்ம எல்லாருமே Whatsaapp பயன்படுத்திட்டு தான் இருக்கோம். அதுலயும் சில பேர் 2 Whatsapp Account கூட பயன்படுத்துகின்றனர். ஆனால், அதுல நிறைய பேர் எந்த அளவுக்கு Whatsaapp-அ பாதுகாப்பாக  பயன்படுத்துராங்க அப்படிங்கறதுதான் இன்னைக்கு இருக்கிற பெரிய பிரச்சனை!

Whatsapp இன்னைக்கு நம்மளோட தினசரி வாழ்க்கையில் பாதி தேவைகளை பூர்த்தி பன்னிட்டு இருக்கு. பணத்தை தவிர, மற்ற புகைப்படங்களா இருந்தாலும் சரி, புத்தகங்களா இருந்தாலும் சரி நம்ம இருக்கிற இடமாக(Location) இருந்தாலும் சரி, காணொளிகள்(Video), நம்ம சொல்ல வந்தத அப்படியே ஆடியோ பதிவாகக் கூட நம்ம அனுப்ப நினைக்கிறவங்களுக்கு ஈஸியா எளிமையா பகிர முடியுது. அந்த அளவுக்கு இன்னைக்கு Whatsapp-ல பல விஷயங்களை எளிமையா செய்ய முடியுது.

   பெரும்பாலும் நம்மிடம் யாரோ ஒருவர் நம்மட்ட Whatsapp நம்பர் வேணும்னு சொல்லி கேக்கும்பொழுது, நாமும் Whatsapp தானே என்று கொடுத்து விடுகின்றோம். ஆனால் நம்முடைய முதன்மையான மொபைல் நம்பர் அதுவாகக் கூட இருக்கலாம் என்று அப்போதைக்கு தெரிவதில்லை. அந்த Whatsapp  மூலம் அவங்க கொடுத்து வச்சிருக்க Settings மூலமா அவங்களோட தகவல்களை அடுத்தவர்கள் கூட எளிமையாகப் பார்க்க முடியும்ன்னு இங்கு நிறைய பேருக்குத் இன்னும்  தெரியவில்லை. பெரும்பாலும் ஒவ்வொருத்தரும் அவங்களோட முக்கியமான மொபைல் நம்பரை தான் Whatsapp நம்பரா பயன்படுத்திட்டு இருக்காங்க. அந்த மொபைல் நம்பர யார் கேட்டாலும் கொடுக்கிறாங்க! ஆனா அதுக்கப்புறம்?

நம்ம Whatsapp-ல பயன்படுத்திக்கிட்டு இருக்க நம்பர அடுத்தவங்க கிட்ட கொடுத்த உடனே, அவங்க அந்த நம்பர அவங்களோட மொபைல்ல சேமித்த உடனே நம்மளோட Whatsapp-ல அடுத்தவங்க பார்க்கிற மாதிரி Settings Enable-ல இருந்தா அவங்களால நம்மளோட பெரும்பாலான Whatsapp-ல உள்ள தகவல்கள பார்க்க முடியும். உதாரணத்துக்கு நம்ம Whatsapp-ல வச்சிருக்க முன்புகைப்படத்தை(Profile Picture)- அ யாரு வேணாலும் பார்க்கிற மாதிரி Settings Enable- ல இருந்திச்சுன்னா, நம்ம நம்பர சம்பந்தமில்லாத யாரோ ஒருவர் கூட நம்ம நம்பர சேமிச்சு வச்சிருக்காங்கன்னா நாம வைக்கிற புகைப்படம் எல்லாத்தையும் அவங்களால பாக்க முடியும்ன்னு உங்களுக்கு தெர்யுமா? அதுமாதிரிதான் நம்மளோட கடைசி பார்வையையும்(Last seen) எல்லோரும் பாக்குற மாதிரி நாம Settings வச்சிருந்தோம்னா, நமக்கு தெரியாதவங்க கூட நம்ம Whatsapp தகவல்கள நம்ம நம்பர் சேமித்து வைக்கிறது மூலமா பார்க்க முடியும்!

இதையெல்லாம் தவிர்க்க நாம என்ன செய்யனும்?

* நாம பயன்படுத்துற Whatsapp அக்கவுண்ட் போய் நாம வச்சிருக்க புகைபடத்த யார் யார் பாக்கணும்? நம்மளோட About Option போய்ட்டு நம்ம சேமிச்சு வச்சு இருக்க நமக்கு தெரிஞ்சவங்க  மட்டும் பார்ப்பது மாதிரி My Contacts Option அ select பன்னனும்.

 

   *பிறகு நம்மளோட Status Option போய்ட்டு அதுலயும் நம்ம புதுசா சேமிக்கிற நண்பர்கள் எல்லோரும் நம்ம Update பன்ற Status-அ பாக்கணும்னு அவசியமில்லை. ஒருத்தவங்க கிட்ட நம்ம மொபைல் நம்பரை கொடுக்கிறோம் இல்ல அவங்க கிட்ட அவங்களோட மொபைல் நம்பரை வாங்கி நம்ம மொபைல்ல சேமிக்கிறப்போ நம்ம கொஞ்ச நாளைக்கு நம்மளோடStatus-அ அவங்க பார்க்காத மாதிரி Hide பன்னி இருந்தா ரொம்பவே நல்லது.ஏன்னா இன்னைக்கு நிலைமைக்கு நம்ம Privacy ரொம்பவே முக்கியமான ஒன்று. சில நாட்களோ சில வாரங்களோ கடந்து நம்ம Status-அ அவங்களுக்கு Show பன்னனுமா வேண்டாமான்னு நாம முடிவு பண்ணிக்கலாம்.

 

   இதெல்லாம் எல்லோரும் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள். சரி! இதன் பின்னர் நாம எல்லோருமே பொதுவா செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இப்போ பார்க்கலாம். Settings  போய்ட்டு கண்டிப்பா எல்லோரும் 2 Step Verification-அ Enable பன்னி வச்சிக்கிறது ரொம்பவே நல்லது. இதுல கடைசியா E-mail address-ன்ற ஒரு Option இருக்கும். அது கொடுக்கனுமா வேணாமான்னு பாத்துட்டு கொடுங்க.( E-mail கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல).பிறகு 2-Step Verification Enable பன்னிட்டு, நீங்க கொடுக்கிற இரகசிய குறியீட்டை (Password) குறைந்தபட்சம் மாதத்திற்கு இரண்டு முறையாவது மாற்றி விடுங்கள்.

     பெரும்பாலும் அதிகமாக வரக்கூடிய இலவச Data, அமேசான், பிளிப்கர்ட் offer, ஒரு ரூபாய்க்கு மொபைல், நம்ம நண்பர்கள் அனுப்புற Unwanted Links-அ தொட வேண்டாம். நாம் தெரிந்தோ, தெரியாமலோ அதுபோன்ற Links-ஐ தொடும்பொழுது நம்ம மொபைல் சைபர் ரீதியிலான பாதிப்படைய(Hacking) அதிக வாய்ப்புகள் உண்டு. பிறகு உள்நாட்டு நம்பர் அல்லாத பல புதிய பல வெளிநாட்டு நம்பரிலிருந்து வரும் Whatsapp அழைப்புகளை( Whatsapp calls) உடனே எடுக்க வேண்டாம்.

    Whatsapp-ல பாதுகாப்பு எந்த அளவுக்கு முக்கியம்ன்ற ஒரு விஷயத்துக்கு எடுத்துக்காட்டான ஒரு சின்ன உதாரணம் நம்மளோட Whatsapp-க்கு இரண்டு முறை Video அழைப்புகளை மேற்கொள்வதன் மூலமாகக் கூட நம்ம மொபைலுக்கு சைபர் ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். Play Store-ல் கிடைக்கிற அதிகாரப்பூர்வமான Whatsapp மற்றும் Whatsapp Business Applications-களை Install செய்ய வேண்டாம். அவ்வாறு Install செய்யும் பட்சத்தில் உங்களது மொபைலுக்கு விரைவில் Hacking ஆபத்துக்கள் வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Send this to a friend