ஒரு குறுஞ்செய்தி போதும் உங்கள் Mobile-யை Hack செய்ய…
![]()
SIM Jacker என்பது அலைபேசியில் உள்ள சிம்கார்டை முடக்கி (Hacking)அதன்மூலம் அலைபேசியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹேக்கர்கள் பயன்படுத்தும் ஒரு கருவியாகும்.
இதன் மூலம் நமது அலைபேசியை முடக்க அவர்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாலே போதுமானது.
“இந்த SIM Jacker எனும் கருவியை பயன்படுத்தி இரண்டு ஆண்டுகள் வரை நமது அலைபேசியை கண்காணிக்க முடியும்” என்பதும்,பல நாடுகளில் இன்று இந்த முறையை பயன்படுத்தி அலைபேசிகள் கண்காணிக்கப்படுகிறது என்பதும் அலைபேசி பயன்பாட்டாளர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த SIM Jacker கருவியை ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து அந்தந்த நாடுகளின் அரசுகளுடன் இணைந்து தனிநபர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களின் என அரசு நினைக்கும் அனைவரின் தகவல்களை எடுக்கவும் அவர்களை கண்காணிக்கவும் பயன்படுத்துகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் பல பத்திரிக்கையாளர்களின் whatsapp கணக்குகள் முடக்கப்பட்டன என்று வெளி வந்த செய்தியின் பின்னணியில் NSO எனும் இஸ்ரேலை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்த NSO எனும் தனியார் நிறுவனம் இஸ்ரேல் மட்டுமல்லாது; பல நாடுகளின் அரசுகளுடன் இணைந்து இந்த மாதிரியான கண்காணிப்பு மற்றும் தகவல் திருட்டுகளை அந்த அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பணம் பெற்றுக்கொண்டு செய்து கொடுக்கும் நிறுவனம் எனவும் சொல்லபடுகிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு வாட்ஸ்அப் பயன்படுத்தினால் தானே ஆபத்து என்று Whatsapp ஐ uninstall செய்தவர்களுக்கு இந்த SIM Jacker எனும் கருவி அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
![]()
நீங்கள் whatsapp பயன்படுத்தாமல் இருந்தால் கூட அலைபேசி பயன்படுத்தினாலே போதும் உங்கள் சிம் கார்டின் வழியாக உங்களை கண்காணிக்கவும், தகவல்களைத் திருடவும் முடியும் என்கிறது இந்த SIM Jacker கருவி.
Adaptive mobile security நிறுவனத்தின் CTO ,Cathal McDaid வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில்
SIMJacker கருவியின் இலக்குக்கு உள்ளான சாதனத்தின் இருப்பிட மற்றும் (IMEI)ஐஎம்இஐ எண்ணை எடுக்கவும் ;
தவறான தகவல்களை உங்களது தொலைபேசியிலிருந்து பரப்பவும்,
இணையதள மோசடிகளை உங்களது தொலைபேசியில் இருந்து செய்து கொள்ளவும்,
உங்களது அந்தரங்க விடயங்களை உளவு பார்க்கும், கண்காணிக்கவும்,
சிம்கார்டை முடக்கி உங்களது அலைபேசிக்கான சேவைகளை முடக்கவும் முடியும் என எச்சரித்துள்ளார்.
