சைபர் கிரைமில் பில்லியன் டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியா அரசு!
ஆஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் (ஏ.ஐ.சி) ஓரிரு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆஸ்திரேலிய நாட்டின் குடிமக்கள் ஒவ்வொரு ஆண்டும், இணைய குற்றங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்து வருவதாக அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றினை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் மொத்த சைபர் குற்றங்களின் பொருளாதார செலவாக ஆண்டுக்கு 3.5 பில்லியன் டாலர் இழக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
இதில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களால் இழந்த 1.9 பில்லியன் டாலர் அடங்கும்.
சைபர் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு ஆண்டும் 1.4 பில்லியன் டாலர் மற்றும் சைபர் தாக்குதல்களின் விளைவுகளைச் சமாளிக்க 597 மில்லியன் டாலர் செலவழிக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு பதிலளித்த ஆஸ்திரேலிய நாட்டின் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ்,
“இந்த குற்றச் செயளுக்கான நமது பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பில் ஒரு குறிப்பிடத்தக்க செலவினமாக மாற்ற அரசால் அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
மேலும், சைபர் குற்றம் ஆஸ்திரேலியர்களுக்கும் நமது பொருளாதாரத்திற்கும் அளிக்கும் உண்மையான மற்றும் தற்போதைய ஆபத்தைத் கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் தற்பொழுது அதிக அளவில் நடவடிக்கை எடுத்து வருகின்றது” என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், அவை கட்டாயமான நிலையில் ஏற்படுத்துவதாஅல்லது தன்னார்வமாக்குவதா என்று அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.