உலக அளவில் வெளியானது twitter புளூ சேவை..!
அறிமுகமானது ட்விட்டர் புளூ சேவை..! இனிமேல் வெரிஃபைடு டிக் இருக்காது.
ட்விட்டர் புளூ சேவை சமீப காலத்தில் அறிமுகமான நிலையில் 50 நாடுகளில் மட்டுமே இந்த சேவை நடைமுறையில் இருந்தது. தற்பொழுது உலக அளவில் இந்த சேவை வெளியான நிலையில் ட்விட்டரின் பழைய வெரிஃபைடு திட்டம் தற்பொழுது நடைமுறையில் இருந்து நிறுத்தப்படுகிறது.
ஏப்ரல் 1 2023 முதல் ட்விட்டர் அக்கவுண்டுகளை வெரிஃபைட் செய்யும் முறையானது நிறுத்தப்படுகிறது. ட்விட்டரின் புளூ சந்தா அமலுக்கு வரும் முன்பே பயனாளர்களின் அக்கவுண்டுகளை வெரிஃபைட் செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என ட்விட்டர் முதன்மை நிறுவனம் அறிவித்து உள்ளது.
உலக அளவில் சில நாடுகளில் மட்டுமே ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது உலக அளவில் வெளியாகி விட்டது. புதிய அப்டேட்டுகள் கொண்டு வந்த நிலையில் வெரிஃபைட் செக்மார்க் தற்பொழுது முதல் நிறுத்தப்படுகிறது என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்பு நிறைய புதிய புதிய அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. ட்விட்டர் பயனாளர்களுக்கு நிறைய புதிய புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ட்விட்டர் உரையாடலுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது மட்டும் இன்றி குறைந்த விளம்பரங்கள் மற்றும் ட்விட்டர்களை எடிட் செய்யும் வசதி இதுபோன்று பல புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது.
மிக முக்கிய அம்சமாக 4 ஆயிரம் எழுத்துக்கள் ட்விட் செய்யும் வசதி புதிதாக வழங்கப்பட்டுள்ளது.