தொழில்நுட்பம்

உங்களிடம் பழைய செல்போன் இருக்கா..? அப்போ CCTV கேமராவா மாற்றலாம் வாருங்கள்..!

ஒரு ரூபாய் கூட செலவில்லாத CCTV கேமரா..! 

உங்களிடம் பயன் படாத பழைய செல்போன் இருந்தா அதை பாதி விலைக்கு விற்கவோ அல்லது ஸ்டோர் ரூமில் வைக்கவோ வேண்டாம். அந்த பயன்படாத செல்போனை நம் வீட்டிற்கு உபயோகப்படுமாறு CCTV கேமராவாக மாற்றி அமைக்கலாம். இதை எப்படி செய்வதன்று தொடர்ந்து பார்க்கலாம். 

நாம் பயன்படுத்தும் செல்போன் கேமரா  வசதியுடன் ஆண்ட்ராய்டு அல்லது IOS  தளத்தில் இயங்கும் எந்த ஒரு செல்போனும் CCTV  கேமராவாக மாற்ற இயலும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதற்காக நீங்கள் எந்த பணமும் செலவிடத் தேவையில்லை பொதுவாகவே வீட்டிற்கு CCTV  கேமரா பொருத்த வேண்டும் என்றால் குறைந்தது 30 ஆயிரம் செலவிட வேண்டியது இருக்கும் ஆனால் இதுபோல் பழைய செல்போனை பயன்படுத்தி எந்த ஒரு செலவும் இல்லாமல் நாம் வீட்டிற்கு பயன்படுமாறு CCTV  கேமராவாக மாற்றி அமைக்கலாம். 

இந்த செய்முறையை செய்வதற்கு குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடங்களே ஆகும். Google play store மற்றும் Apple store போன்ற ஆப்ஸ் உதவியுடன் செல்போனை CCTV கேமராவாக மிக எளிதாக மாற்ற இயலும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *