இணையதள பாதுகாப்புகட்டுரைகள்

Encryption என்றால் என்ன?

Encryption என்றால் குறியாக்கம் என்ற வார்த்தை மட்டும் கிடையாது. Encryption என்பது ஒரு Data அல்லது ஒரு தகவல் போன்ற ஏதேனும் ஒன்றை அனுப்புவருக்கும், அந்த தகவலை பெறுபவருக்கும் இடையில், அந்தத் தகவலை இடையில் யாரும் பார்க்க அல்லது படிக்க முடியாதவாறு ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.

Encryption -ஐ பற்றி ஒரு சில வரிகளில் விளக்க முடியாது என்றாலும் அதைப் பற்றிய சில முக்கியமானவற்றை மற்றும் தற்போது பார்க்கலாம்.

தற்பொழுது நாம் வாழக்கூடிய இந்த டிஜிட்டல் உலகில் பெரும்பான்மையானவற்றில் Encryption முறை பயன்படுத்தப்படுகின்றது.

Whatsapp போன்ற செயலிகள் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், Online -மூலமாக மேற்கொள்ளப்டும் பணப் பரிவர்த்தனைகள், வங்கி சம்பந்தமான தகவல் பரிமாற்றங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இந்த Encryption முறையானது செயல்படுத்தப்படுகின்றது.

ஏன் இந்த Encryption?

தொழில் நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்து வருகின்றதோ அதே அளவுக்கு, இணையத்தில் தீங்கு விள்ளைவிக்ககூடிய Hacker -களும், தொழில்நுட்பங்களும் தகவல் திருட்டை ஏற்படுத்தி விடுகின்றது. தகவல் திருடுதல் மற்றும் சிதைத்தல் போன்றவை தற்பொழுது சாதாரணமாக நடைபெறக்கூடிய ஒன்றாகிவிட்டது.

இதுபோன்ற இணைய குற்றங்களைக் குறைக்கவே CYBERLITES உங்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எப்படி இந்த Encryption செயல்படுகின்றது? Encryption செய்யப்பட்ட எழுத்துக்கள் Cybertext எனவும், UnEncryption செய்யப்பட்ட எழுத்துக்கள் Plaintext என்றும் அழைக்கப் படுகின்றது.

ஏனென்றால் இந்த Encryption செய்யப்பட்ட data-க்களை அவ்வளவு எளிதில் திருட முடியாது என்பதுவே இதன் பொருளாகும். இந்த encrypt செய்யப்பட்ட data க்களை பார்ப்பதற்கு Public key மற்றும் Private key என்ற என்ற முறைகள் பயன்படுகின்றது.Encyption

Public மற்றும் Private Key  என்ற முறைகளைப்  பயன்படுத்தி  நாம் Encrypt செய்யப்பட்ட Data-க்களை Decrypt செய்து அனுப்பிய Data-க்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஏன் இந்த Key  முறைகள்? இது எவ்வாறு செயல்படுகின்றது?இதன் அடுத்த நிலையாக end to end Encryption என்றால் என்ன?   என்பது குறித்து நாம் அடுத்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *