இணையதள குற்றங்கள்

Paytm அதிகாரப்பூர்வமாக தடை!

     இந்தியாவில் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக PayTm தடை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு  சீன ஆப்ஸ்கள் மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்களை காண்பிக்கும் apps-கள் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. சில   வாரங்களுக்கு முன்னர் சீனாவிற்குச் சொந்தமான 59 ஆப்ஸ்களை அதன் ஒழுங்கீன செயல்பாடுகளால் இந்திய அரசாங்கம் தடை செய்தது. அதைத்  தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர்  முக்கியமான மற்றும் பிரபலமான PUBGஉள்ளிட்ட  118 ஆப்ஸ்களை இந்திய அரசாங்கம் தடை செய்திருந்தது. தற்போது தொடர்ந்து வேகமாக எடுக்கப்பட்டு வரும் இந்த பாதுகாப்பு நலன் கருதிய செயலின் காரணமாக இன்று PayTm app – ஐ இன்று தடை செய்துள்ளது

 

       இந்திய அரசாங்கம் இந்த PayTm app – ல் விளையாட்டு சூதாட்டங்கள் குறித்த விதிமுறைகளை  மீறியது மற்றும் சில ஒழுங்கீன செயல்பாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாலும், மேலும் கூகுளின் விதிகளை மீறியதாலும் PayTm அதிரடியாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், PayTm app-ஐ பயன்படுத்தி வந்த அதனுடைய பயனாளர்கள் தங்களது பணம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. PayTm-இல் உள்ள தங்களது பணத்தை அதில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும்,இதுகுறித்த பிரச்சினைகள் முடியும் வரை PayTm app-ஐ பயன்படுத்த வேண்டாம் என்றும் ,அதிகாரப்பூர்வமாக சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனாளிகள் பயன்படுத்தி வந்த PayTm  app ஆனது தற்பொழுது ஒழுங்கீன செயல்பாட்டால் தடை செய்யப்பட்டிருப்பது அதனுடைய பயனர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும்   இது   போன்ற செயல்பாடுகளைக் கொண்ட apps – களை கண்டறிந்தால் அது உடனடியாக தடை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தற்பொழுது நம்பிக்கையுடன் பயன்படுத்திவரும் பல apps-களில் முக்கியமான ஒன்றுPayTm செயலி. தற்பொழுது இந்த அரசு தடை விதித்திருப்பது பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்த apps -களின் பயன்பாட்டில் அதிக அளவில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. பாதிப்புகள் ஏற்பட்டு அதன் பிறகு இதுபோன்று apps- களின் செயல்பாடுகளைத் தடை செய்வதைத் தவிர்த்து பாதிப்பு ஏற்படதவாறு முன்னரேக் கண்டறிந்து, இது போன்ற எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் வேண்டுமென்பது டிஜிட்டல் உலகத்தின் முக்கிய தேவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *