டைனோசருக்குப் பதில் மோடி? Pm Care Game!

 Pm Care என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும், இதுபோன்ற அவசர காலத்தில் மக்களுக்கு அரசு உதவும் நோக்கிலும் கடந்த மார்ச் மாதம்-27 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது ஆகும்.

நிறுவப்பட்ட 52 நாட்களுக்குள் 9,677.9   கோடி Pm Care நிதியில் டெபாசிட் செய்யப்பட்டது. 13-மே 2020 அன்று, பிரதமர் அலுவலகம் COVID-19 பணிகளுக்காகPm Cares-இல் இருந்து 3,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இது இதனுடைய நிதியில் இருந்து முதளில் மேற்கொள்ளப்பட்ட செலவாகும். இது 2020 மே 20 வரை வசூலிக்கப்பட்ட ரூ .9,677.9 கோடியில் 32% மட்டுமே.

இந்த அமைப்பானது இதனுடைய தலைமைச் செயலகத்தை டெல்லியில் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதற்கு பணம் அளிப்பதற்கு ATM கார்டு, Credit கார்டு,இணைய வங்கிச் சேவை(Net Banking) உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த pmcare fund அமைப்பின் நிலை என்ன என்ற செய்தி வெளியிடப் படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் இதற்கான அறிக்கை இல்லை.

 

 

இதற்காக தற்பொழுது இணையத்தில் ஒரு(Pmcare.fund) என்ற வலைப்பக்கத்தில் மோடி போன்ற ஒரு சிறு பொம்மை உருவாக்கப்பட்டு அதில் ஒரு சிறு கணினி விளையாட்டையும் இணைதுள்ளார்கள்.

அதில் எதிர்வரும் ஆபத்துகளில் இருந்து மோடி தப்பிப்பது போன்றும், ஆபத்துகளில் சிக்கும் பொழுது கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட சட்டங்களை குறிப்பது போன்ற வாசகங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையப் பக்கம் அதிகப்படியான பார்வையாளர்களை பெற்றுள்ளது.  Pm care குறித்த செய்திகளை காண்பிக்க இயலாது என்றும், இதை அரசு மறைத்துள்ளதாகவும் இதில் எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *